BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample
ரோம் செல்லும் வழியில், பவுலை ஏற்றிச் சென்ற படகு கடுமையான புயலால் தாக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு முந்தைய இரவில் இயேசு செய்ததைப் போலவே, கப்பலின் அடித் தளத்தில் உணவு வழங்கிய பவுல் தவிர அனைவரும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பயப்படுகிறார்கள். பவுல் புயலினூடாக தேவன் அவர்களுடன் இருக்கிறார் என்று வாக்குறுதியளித்து, அப்பத்தை ஆசீர்வதித்து பிட்கிறார். அடுத்த நாள், கப்பல் பாறைகளில் மோதி உடைந்து அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு இழுத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், ஆனால் பவுல் இன்னும் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருக்கிறார். அவர் ரோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அது அவ்வளவு மோசமானதல்ல, ஏனென்றால் உயிர்த்தெழுந்த ராஜாவாகிய இயேசுவைப் பற்றிய சுவிஷேசத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள யூதர்கள் மற்றும் யூதரல்லாத பெரிய குழுக்களை வழிநடத்த பவுல் அனுமதிக்கப்படுகிறார். மிகவும் ஆச்சரியமாக, உலகின் மிக சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தின் இதயமான ரோமில் ஒரு கைதியின் துன்பத்தின் மூலம் இயேசுவின் மாற்று தலைகீழான இராஜ்யம் வளர்ந்து வருகிறது. ராஜ்யங்களுக்கிடையேயான இந்த வேறுபாட்டைக் கொண்டு, லூக்கா தனது பதிவை முடிக்கிறார், இது மிக நீண்ட சம்பவத்தின் ஒரு அதிகாரம் மட்டுமே. இதன் மூலம் சுவிஷேசத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான பயணம் முடிவடையவில்லை என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொல்கிறார். இயேசுவை விசுவாசிக்கிற அனைவரும் அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கலாம், அது இன்றுவரை தொடர்ந்து பரவி வருகிறது.
About this Plan
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More