BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample
எபேசுவில் சலசலப்பு முடிந்தபின், வருடாந்திர பெந்தெகொஸ்தே பண்டிகைக்குப் பவுல் எருசலேமுக்குத் திரும்பிச் செல்கிறான். அவன் செல்லும் வழியில், சுவிஷேசத்தைப் பிரசங்கிப்பதற்கும் இயேசுவை விசுவாசிப்பவர்களை ஊக்குவிப்பதற்கும் பல பட்டணங்களுக்குச் செல்கிறான். இதில், பவுலுக்கும் இயேசுவின் ஊழியத்திற்கும் இடையில் ஒரு இணையைக் காண்கிறோம். இயேசு வருடாந்திர யூத திருவிழாவிற்காக (அவருடைய விஷயத்தில், பஸ்கா) எருசலேமுக்கு புறப்பட்டு, வழியில் அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்தைப் பிரசங்கித்தார். சிலுவை அவருக்காகக் காத்திருப்பதை இயேசு அறிந்ததைப் போலவே, தலைநகரில் தனக்கு கஷ்டங்களும் துன்பங்களும் காத்திருக்கின்றன என்பதையும் பவுல் அறிவான். எனவே இந்த அறிவைக் கொண்டு, அவன் ஒரு பிரியாவிடை கூட்டத்தைத் திட்டமிடுகிறான். அருகிலுள்ள பட்டணத்தில் அவனைச் சந்திக்க எபேசுவிலிருந்து வரும் போதகர்களை அவன் அழைக்கிறான், அங்கு அவன் போன பின் விஷயங்கள் கடினமாகிவிடும் என்று எச்சரிக்கிறான். ஏழைகளுக்கு தாராளமாக உதவவும், அவர்களின் தேவாலயங்களை விடாமுயற்சியுடன் பாதுகாக்கவும் வளர்க்கவும் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவன் கூறுகிறான். பவுலுக்கு விடைசொல்ல வேண்டும் என்று எல்லோரும் நொந்து போகிறார்கள். அவர்கள் அழுகிறார்கள், கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்கள், அவன் புறப்படும் கப்பலில் ஏறும் வரை அவன் பக்கத்தை விட்டு வெளியேற மறுக்கிறார்கள்.
Scripture
About this Plan
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More