BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample
ரோமில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பவுல் முறையிட்ட பிறகு, பெஸ்து அகிரிப்பா ராஜாவுக்கு நடந்த அனைத்தையும் வெளியிடுகிறான். இது ராஜாவின் ஆர்வத்தைத் தூண்டுகிறது, மேலும் அவன் பவுலிடம் தனிப்பட்ட முறையில் கேட்க விரும்புவதாக முடிவு செய்கிறான். ஆகவே, மறுநாள், எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும், பவுல் சாட்சியமளிப்பதைக் கேட்க பல முக்கியமான அதிகாரிகள் அகிரிப்பாவுடன் வருகிறார்கள் என்றும் லூக்கா சொல்கிறார். லூக்கா பின்னர் பவுலின் கதை மற்றும் பிரதிவாதம் பற்றிய மூன்றாவது பதிவை எழுதுகிறார். ஆனால் இந்த நேரத்தில், லூக்காவின் பதிவு பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவை சந்தித்த நாளில் என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டுகிறது. பவுலைச் சுற்றிலும் கண்கூசும் ஒளி பிரகாசித்தபோது, பரலோகத்திலிருந்து வரும் குரலைக் கேட்டபோது, அது ஒரு எபிரேய பேச்சுவழக்கில் பேசும் இயேசுவானவார். அவர் மாற்றியமைத்த அனுபவத்தை புறஜாதியினருடனும் யூதர்களுடனும் பகிர்ந்து கொள்ளும்படி இயேசு அவரை அழைத்தார், இதனால் அவர்களும் தேவனின் மன்னிப்பின் ஒளியைக் காணவும் சாத்தானின் இருளில் இருந்து தப்பிக்கவும் முடியும். பவுல் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவின் பாடுகளையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய உண்மையை செவிமடுக்கும் எவருடனும் பகிர்ந்து கொண்டான், எபிரெய வேதாகமத்திலிருந்து இயேசு உண்மையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா, யூதர்களின் ராஜா என்பதை அவர்களுக்குக் காட்டுகிறான். பெஸ்துவால் பவுலின் கதையை நம்ப முடியவில்லை, மேலும் பவுல் தன்னுடைய சுய நினைவில் இல்லை என்று கத்துகிறான். ஆனால் அகிரிப்பா பவுலின் வார்த்தைகளில் ஒத்திசைவைக் காண்கிறான், மேலும் அவன் ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கு நெருக்கத்தில் இருப்பதாக ஒப்புக்கொள்கிறான். பெஸ்து மற்றும் அகிரிப்பா ஆகியோர் பவுலின் மனநிலையைப் பற்றிய கருத்தில் உடன்படவில்லை என்றாலும், பவுல் மரணத்திற்கோ சிறைவாசத்திற்கோ தகுதியான எதையும் செய்யவில்லை என்பதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
Scripture
About this Plan
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More