BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample
லூக்கா இயேசுவின் வாழ்க்கையின் ஆரம்பகால சாட்சிகளில் பலரை ஆராய்ந்து பின்னர் தனது சுவிசேஷத்தை எழுதுகிறார். பூமியெங்கும் தனது ராஜ்யத்தை நிலைநாட்ட தேவனே ஒரு நாள் வருவார் என்று இஸ்ரவேலின் பண்டைய தீர்க்கதரிசிகள் சொன்ன எருசலேமின் மலைப்பகுதிகளில் சம்பவம் தொடங்குகிறது.
எருசலேமின் ஆலயத்தில் வேலை செய்யும், சகரியா என்ற ஆசாரியன் ஒரு நாள் அசாதரணமான ஒரு தரிசனத்தை கண்டான். ஒரு தேவதூதன் தோன்றி அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஒரு குமாரன் பிறப்பான் என்று கூறுகிறான். இது விசித்திரமானது, ஏனென்றால் சகரியாவும் அவரது மனைவியும் மிகவும் வயதானவர்கள், அவர்களால் ஒருபோதும் குழந்தைகளைப் பெற முடியாது என்று லூக்கா சொல்கிறார். இஸ்ரவேலின் மூத்த மூதாதையர்களான ஆபிரகாம் மற்றும் சாராவுடன் ஒப்பிட்டு இந்த விவரத்துடன், லூக்கா அவர்களுடைய சம்பவத்தை இணையாக அமைக்கிறார். அவர்களும் மிகவும் வயதானவர்கள், இஸ்ரவேலின் முழு சரித்திரத்தையும் தொடங்கிய தேவனின் அற்புதத்தின் மூலம் ஒரு குமாரனான , ஈசாக்கைக் கொடுக்கும் வரை, அவர்களால் ஒருபோதும் குழந்தைகளைப் பெற முடியாமல் இருந்தது. ஆகவே, தேவன் மீண்டும் ஒருமுறை குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்யப்போகிறார் என்று லூக்கா இங்கே குறிப்பிடுகிறார். தேவதூதன் சகரியாவிடம் அவனுடைய குமாரனுக்கு யோவான் என்று பெயரிடுமாறு சொல்கிறான். தேவன் எருசலேமை ஆட்சி செய்ய வரும்போது இஸ்ரவேலை ஆயத்தம் பண்ணுவதற்கு அவரைச் சந்திக்க யாராவது வருவார்கள் என்று பழைய தீர்க்கதரிசிகள் சுட்டிக்காட்டியது அவனுடைய குமாரனாக இருக்கும் என்று அவன் கூறுகிறான். சகரியாவால் அதை நம்பவே முடியவில்லை, யோவான் பிறக்கும் வரை அவன் பேச்சற்றவனாக இருக்கிறான்.
இதே தேவதூதன் இது மாதிரியான ஆச்சரியான செய்திகளுடன் மரியாள் என்ற கன்னியையும் சந்திக்கிறான். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு அவளும் அற்புதத்தால் ஒரு குமாரனைப் பெறுவாள். தேவதூதன் அந்தக் குழந்தைக்கு இயேசு என்று பெயரிடும்படி சொல்கிறான், அவர் தாவீதைப் போன்ற ஒரு ராஜாவாக இருப்பார், அவர் தேவனுடைய மக்களை என்றென்றும் ஆளுவார். தேவன் தன்னை தனது வயிற்றில் மனிதகுலத்துடன் இணைத்துக் கொள்வார் என்றும், மேசியாவைப் பெற்றெடுப்பாள் என்றும் அவள் அறிகிறாள். எனவே, மரியாள் ஒரு கிராமத்துப் பெண்ணாய் இருந்து வருங்கால ராஜாவின் தாயாக ஆகிறாள். தனது சொந்த சமூக அந்தஸ்தின் தலைகீழான நிலை எவ்வாறு வரவிருக்கும் ஒரு பெரிய எழுச்சியைக் காட்டுகிறது என்பதைப் பற்றி அவள் ஆச்சரியப்பட்டு, ஒரு பாடலைப் பாடுகிறாள். அவளுடைய மகன் மூலமாக, தேவன் ஆட்சி செய்பவர்களை அவர்களின் சிம்மாசனங்களிலிருந்து வீழ்த்தி, ஏழைகளையும் எளியவர்களையும் உயர்த்தப் போகிறார். அவர் முழு உலகஅமைப்பையும் தலைகீழாக மாற்றப் போகிறார்.
Scripture
About this Plan
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More