BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample
இயேசு பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் தேவனுடைய ராஜ்யத்தை அறிவிக்கத் தொடங்குகிறார் என்று லூக்கா சொல்கிறார். ஆனால் ஒரு வழக்கமான ராஜாவைப் போல அரச பரிவாரங்களுடன் பயணம் செய்வதற்குப் பதிலாக, இயேசு தாம் சொஸ்தமாக்கிய மற்றும் விடுவித்தவர்களான, தம்மைத் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேர் கொண்ட ஒதுக்கப்பட்ட குழு மற்றும் சில பெண்களுடன் பயணம் செய்கிறார். இயேசுவின் சீடர்கள் அவரோடு வெறுமனே பயணிப்பவர்கள் மட்டும் இல்லை; அவர்கள் பங்கேற்பாளர்கள். இயேசுவின் சுவிஷேசத்தைப் பெற்றவர்கள், விடுவிக்கப்பட்டவர்கள், சொஸ்தமானவர்கள் அதனை ஒரு பட்டணத்திலிருந்து அடுத்த பட்டணத்திற்க்கு பகிர்ந்துகொள்கிறார்கள்.
அவர்களின் பயணங்கள் வனாந்திர அனுபவங்கள் நிறைந்தவை. இயேசு ஒரு கடற்புயலை அமைதியாக்குகிறார், ஆயிரக்கணக்கான பிசாசுகளிடமிருந்து ஒரு மனிதனை விடுவிக்கிறார், பன்னிரண்டு ஆண்டுகளாக துன்பப்பட்ட ஒரு பெண்ணைக் குணமாக்குகிறார், பன்னிரெண்டு வயது சிறுமியை மரித்தோரிலிருந்து எழுப்புகிறார், ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு பையனின் மதிய உணவைக் கொண்டு உணவளிக்கிறார்––எல்லோரும் உண்ட பிறகு, அவர்களிடம் பன்னிரண்டு கூடைகள் எஞ்சியிருக்கிறது!
இன்றைய பத்தியை நீங்கள் படிக்கும்போது, லூக்கா “பன்னிரண்டு” என்ற வார்த்தையை எவ்வாறு பலமுறை சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் சீர்திருத்துவதாகக் காட்ட இயேசு உள்நோக்கத்தோடு பன்னிரண்டு சீடர்களை நியமித்தார் என்பதை நினைவில் வையுங்கள். லூக்கா இந்த உண்மையை முன்னிலைப்படுத்த விரும்புகிறார், எனவே அவர் தனது சுவிஷேசக் கணக்கில் “பன்னிரண்டு” என்ற வார்த்தையை பன்னிரண்டு முறை மீண்டும் கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும் போது, இயேசு இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும், இஸ்ரவேல் மூலமாக, உலகம் முழுவதையும் மீட்டுக்கொள்கிறார் என்பதற்கான மற்றொரு வழியைக் காட்டுகிறார்.
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள் மூலம் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று தேவன் வாக்குத்தத்தம் தந்தார், எல்லா தேசங்களுக்கும் ஒரு வெளிச்சமாக இருக்கும்படி தேவன் இஸ்ரவேலை அழைத்தார். இஸ்ரவேல் அவர்கள் தரப்பில் தோல்வியுற்றது, ஆனால் தேவன்தனது வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவர். தேவனுடைய ராஜ்யத்தை அறிவிக்க தனது புதிய பன்னிரண்டு பேரை அனுப்பும்போது, உலகத்தை ஆசீர்வதிப்பதற்கான இஸ்ரவேலின் அழைப்பை மீட்க இயேசு வருகிறார்.
About this Plan
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More