YouVersion Logo
Search Icon

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

DAY 30 OF 40

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலிருந்து விரட்டப்பட்ட பிறகு, இயேசுவின் ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்துடன் இக்கோனியா பட்டணத்திற்குச் செல்கிறார்கள். சிலர் அவர்களுடைய சுவிஷேசத்தை நம்புகிறார்கள், ஆனால் அதை நிராகரிப்பவர்கள் தீவிரமாக அவர்களுக்கு எதிராக பிரச்சினையைத் தூண்டுகிறார்கள். விஷயங்கள் மிகவும் சூடாகி, முழு பட்டணமும் பிரச்சினையில் பிளவுபடுகின்றன. சீஷர்கள் தங்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களை அறிந்தவுடன், அவர்கள் லிக்கவோனியா, லீஸ்திரா, தெர்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்கிறார்கள்.

லீஸ்திராவில் இருக்கும்போது, இதற்கு முன் ஒருமுறையும் நடக்காத ஒரு பிறவி சப்பாணியை பவுல் சந்திக்கிறான். இயேசுவின் வல்லமையால் பவுல் அவனைக் குணமாக்கும்போது, அவன் தங்களைப் பார்க்க வந்த ஒரு கிரேக்க தெய்வமாக இருக்க வேண்டும் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள், எனவே அவர்கள் அவனை வணங்க முயற்சிக்கிறார்கள். பவுலும் பர்னபாவும் மக்களுக்கு புரிய வைக்க விரைகிறார்கள், ஒரே ஒரு மெய்யான தேவன் மட்டுமே இருக்கிறார், தாங்கள் அவருடைய ஊழியர்கள் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் மக்கள் உண்மையில் அதைப் புரிந்து கொள்ளவில்லை, பவுலை கொலை செய்ய வேண்டும் என்று பவுல் மற்றும் பர்னபாவின் எதிரிகளால் அவர்கள் விரைவாக நம்ப வைக்கப்படுகிறார்கள். பவுல் மயக்கமடையும் வரை அவன் மீது கற்களை வீசுகிறார்கள். அவன் இறந்துவிட்டான் என்று கருதி, அவனது உடலை லிஸ்த்ராவிலிருந்து வெளியே இழுக்கிறார்கள். பவுலின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு, அவன் நின்று பட்டணத்திற்குத் திரும்பிச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்த நாள், பவுலும் பர்னபாவும் சுவிஷேசத்தைப் பிரசங்கிக்க தெர்பைக்குச் சென்று, பின்னர் மீண்டும் லிஸ்த்ராவிற்கும் அதைச் சுற்றியுள்ள பட்டணங்களுக்கும் வந்து ஒவ்வொரு புதிய தேவாலயத்திற்கும் அதிகமான தலைவர்களை நியமிக்கவும், கிறிஸ்தவர்களை இன்னல்களுக்கு இடையே விடாமுயற்சியுடன் இருக்க ஊக்குவிக்கிறார்கள்.

Scripture

Day 29Day 31

About this Plan

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More