YouVersion Logo
Search Icon

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

DAY 27 OF 40

இந்தப் பிரிவில், லூக்கா ஒரு ரோம நூற்றுக்கு அதிபதியை அறிமுகப்படுத்துகிறார், கொர்நேலியு என்ற பெயர் கொண்ட ரோம ஆக்கிரமிப்பைப் பற்றி யூத மக்கள் வெறுத்த அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கொர்நேலியுவிடம் ஒரு தேவதுதன் தோன்றி, யோப்பாவில் உள்ள சீமோன் வீட்டில் தங்கியிருக்கும் பேதுரு என்ற மனிதரை அழைக்கச் சொல்கிறான். அதைச் செய்ய கொர்நேலியு ஆட்களை அனுப்பும்போது, தேவதூதர் சொன்ன இடத்தில் பேதுரு இருக்கிறான், யூதர்களின் ஜெப நேரத்தில் பங்கேற்கிறான், திடீரென்று அவனுக்கு ஒரு வித்தியாசமான தரிசனம் கிடைக்கிறது. தரிசனத்தில், யூத மக்கள் சாப்பிட தடை விதிக்கப்பட்ட விலங்குகளை தேவன் அவனுக்குக் கொண்டு வந்து, “இவற்றைச் சாப்பிடு” என்று பேதுருவிடம் கூறுகிறார். "நான் ஒருபோதும் அசுத்தமான எதையும் சாப்பிட்டதில்லை" என்று பேதுரு பதிலளித்தான். ஆனால் "நான் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" என்று தேவன் சொன்னார். இந்தத் தரிசனம் மூன்று முறை மீண்டும் மீண்டும் வந்து பேதுருவை குழப்பமடைய செய்கிறது.

பேதுரு இன்னும் தரிசனத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில், கொர்நேலியுவின் வீட்டிற்குச் செல்ல பேதுரு அவர்களுடன் திரும்பவும் பயணிக்குமாறு அழைப்போடு ஆட்கள் வருகிறார்கள். இந்த நேரத்தில், பேதுரு தான் பார்த்த தரிசனத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான். யூதரல்லாத வீட்டிற்குச் செல்வது ஆச்சாரரீதியாக அசுத்தமான தன்மையை ஏற்படுத்தும் என்று பேதுருக்குத் தெரியும், எனவே அவன் வழக்கமாக அழைப்பை நிராகரிப்பான். ஆனால் தரிசனத்தின் மூலம், யாரையும் அசுத்தமானவன் என்று அழைக்கக்கூடாது என்று பேதுரு சிந்தித்துப் பார்ப்பதற்கு தேவன் உதவி செய்தார்; இயேசுவை நம்பியிருக்கும் எல்லா மக்களையும் சுத்தப்படுத்தும் வல்லமையை தேவன் வைத்திருக்கிறார். ஆகவே, மறுப்பு இல்லாமல், பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்குச் சென்று இயேசு - அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் மன்னிப்பு பற்றிய சுவிஷேசத்தைப் பகிர்ந்து கொள்கிறான். பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது, பெந்தெகொஸ்தே நாளில் இயேசுவின் யூத சீஷர்களுக்காக அவர் செய்ததைப் போலவே, பரிசுத்த ஆவியானவர் கொர்நேலியுவையும் அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் நிரப்புகிறார்! அவ்வாறு நடக்கும் என்று இயேசு சொன்னது போலவே, எல்லா மக்களையும் சென்றடைய இந்த சுவிஷேசம் விரிவடைகிறது.

Day 26Day 28

About this Plan

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More