YouVersion Logo
Search Icon

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

DAY 24 OF 40

நாம் தொடர்ந்து படிக்கும்போது, மற்ற தேசங்களைச் சேர்ந்த யூத மக்கள் இயேசுவை விசுவாசிக்க தொடங்குகையில், இயேசுவின் சுவிசேஷம் வேகமாக வளர்வதைக் காண்கிறோம். அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையைப் பெறுகையில், அவர்களின் வாழ்க்கை மாற்றப்பட்டு, சமூகம் ஒரு புதிய வழியில் வாழத் தொடங்குகிறது, மகிழ்ச்சியும் தாராள மனப்பான்மையும் நிறைந்தது. அவர்கள் அன்றாட உணவை ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் தவறாமல் ஜெபிக்கிறார்கள், அவர்கள் மத்தியில் உள்ள ஏழைகளுக்கு வழங்குவதற்காக தங்கள் பொருட்களை விற்கிறார்கள். ஒரு புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்வது என்றால் என்ன என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள், அங்கு ஒரு ஆலயத்திற்குப் பதிலாக தேவனின் பிரசன்னம் மக்களிடம் இருக்கிறது.

ஆலயத்தில் தேவனை அவமதித்த பின்னர் திடீரென இறந்த இரண்டு ஆசாரியர்களைப் பற்றி லேவியராகமம் புத்தகத்தில் உள்ள விசித்திரமான சம்பவத்தை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இன்றைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்பில், பரிசுத்த ஆவியின் புதிய ஆலயத்தை அவமதித்து இறந்த இரண்டு நபர்களைப் பற்றி லூக்கா இதே போன்ற சம்பவத்தை சொல்கிறார். சீஷர்கள் பீதியடைகிறார்கள். இந்தப் புதிய உடன்படிக்கையின் தீவிரத்தை அவர்கள் புரிந்துகொண்டு எச்சரிக்கையைப் பெறுகிறார்கள், மேலும் புதிய ஆலயத்தில் ஊழல் சரி செய்யப்படுகிறது. ஆனால், பழைய ஆலயக் கட்டடத்தில் ஊழல் தொடர்கிறது, ஏனெனில் ஆலய மதத் தலைவர்கள் இயேசுவின் சீடர்களுக்கும் அவருடைய சுவிஷேசத்திற்கும் எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள். பிரதான ஆசாரியரும் அவருடைய அதிகாரிகளும் அப்போஸ்தலர்களால் அச்சுறுத்தல் அடைகிறார்கள், அவர்கள் மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறார்கள், ஆனால் ஒரு தேவதூதர் அவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, இயேசுவின் ராஜ்யத்தின் சுவிஷேசத்தை தொடர்ந்து பகிர்ந்துகொள்வதற்காக ஆலயத்துக்குச் செல்லும்படி கூறுகிறார். அப்போஸ்தலர்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பதை நிறுத்துமாறு மதத் தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள், ஆனால் அப்போஸ்தலர்கள் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்கள். இந்த சமயத்தில், மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களைக் கொல்லத் தயாராக இருக்கிறார்கள், ஆனால் கமாலியேல் என்ற மனிதன் அவர்களுடைய செய்தி தேவனிடமிருந்து வந்தால், அதைத் தூக்கி எறிய முடியாது என்று வாதிடுவதன் மூலம் அவர்களைத் தடுக்கிறான்.

Day 23Day 25

About this Plan

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More