சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிSample
உப்பாகவும் வெளிச்சமாகவும்
மக்களை உலகத்துக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்க வேண்டும் என்று இயேசு சொன்ன இந்த ஆழமான வாக்கியத்துக்கு முன்பாக பாக்கிய வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் இந்த உலகத்தின் ஒளியாக இருக்கிறார் அல்லவா? நம்மிடம் இருந்து அவர் எதை எதிர்பார்க்கிறார்?
பாக்கிய வசனங்கள் என்ற போதனைக்குப் பின்னர் இயேசு இந்த அறிவுரையைக் கொடுத்ததற்குக் காரணம் என்னவென்றால், நமது கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தனிமையாக நடப்பது அல்ல. அத்துடன் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதமான வாழ்க்கை நமக்கு மட்டும் உரியது அல்ல. பிறரை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். உப்பாகவும் ஒளியாகவும் இருத்தல் என்பது தான் இதை நாம் செய்வதற்கான வழியாகும். உப்பு, வெளிச்சம் ஆகிய இரண்டுமே நாம் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இவற்றில் இருக்கும் ஒரே வித்தியாசமானது ஒன்று மிகவும் தெளிவாக பார்வைக்குத் தெரியக்கூடியது, மற்றது கண்களுக்குத் தெரியாதது என்பது தான். இப்போது நீங்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்ப நீங்கள் உப்பாகவோ ஒளியாகவோ இருக்கிறீர்கள். புதிதாக தாயாகியிருப்பவர்கள் உறக்கம் இல்லாமல் அதிகமான துணிகளைத் துவைக்கும் வேலையில் இருக்கும் போது கர்த்தரை சேவிப்பதற்கான வெளிப்படையான தளங்கள் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் வெளியே தெரியாத வகையில் தங்கள் கணவர் மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கையைத் தொடும் ஊழியத்தைச் செய்கிறார்கள். தொடர்ச்சியான பணி மற்றும் சார்ந்து கொள்ளும் வாய்ப்பைக் கொடுப்பதால் இதைச் செய்கிறார்கள். இது உப்பின் சாரத்துடன் இருப்பது அல்ல என்றால், வேறு எது தான் என்று எனக்குத் தெரியவில்லை. உயர் பதவியில் இருப்பவர்களும், தொழில் முனைவோர்களும் அவர்களை மதிப்புடன் பார்ப்பவர்களுக்கும் உடன் பணிசெய்கிறவர்களுக்கும் வெளிப்படையாக கலங்கரை விளக்கங்களைப் போல இருக்கின்றனர். அங்கே அது வெளிச்சமாக இருக்கின்றது. இந்த உதாரணங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. உங்களுக்கு இது புரிந்திருக்கும். நீங்களே உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறீர்கள். உங்களது முகப்புத்தகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உங்களைப் பின்பற்றாமல் இருக்கலாம். ஆனால் உங்களைப் பின்பற்றும் மிகக் குறைவானவர்களுக்கு நீங்கள் கர்த்தரால் வடிவமைக்கப்பட்ட உங்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் இருக்கும் ஒரு வழியில் பாதிப்பை ஏற்படுத்துகிறவராக இருக்கின்றீர்கள். நீங்கள் பேச்சுத் திறமை இல்லாதவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் கனிவான நபராக இருக்கலாம், அது ஆயிரம் வார்த்தைகளைப் பேசும். கூட்டத்தில் நீங்கள் மறைந்து போன நபராக இருக்கின்றீர்களா? உங்களுடனேயே வெளியே தெரியாமல் இருக்கின்றவர்களுடன் உரையாடி அவர்களை அன்பு செய்யப்படுகின்றவராக, வெளியே தெரிகின்ற ஒரு நபராக ஏன் மாற்றக் கூடாது? சமூக வட்டங்களில் நீங்கள் பிரபலமானவராக இருக்கின்றீர்களா? அதை மிகச் சிறந்த நன்மையான ஒன்றுக்காக நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?
வாழ்க்கையில் நடப்பவற்றை நம்மால் முன்பே கணிக்க முடியாது என்பதால், நமது சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கலாம், நமது அஸ்திபாரங்கள் நகர்ந்து போகலாம், நமது வெளிப்படையான தன்மை மங்கிப் போகலாம், ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்ற நமது பாதிப்பானது ஒரு போதும் மங்கிப் போகாது. நாம் இருக்கும் உலகத்தில் நாம் மிகவும் அவசியமான தேவையானவர்களாக இருக்கிறோம். உப்பில்லாத உணவு சுவையில்லாததாகப் போய்விடும் என்பது போல, வெளிச்சம் இல்லாமல் அறை இருட்டாகப் போய்விடும் என்பது போல, நாம் பாதிப்பை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் முக்கியமானவர்கள்.
நீங்கள் கடந்த பத்து நாட்களாக வாசித்தவைகளை சிந்தித்துப் பார்க்கும் போது, உங்களது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை உங்களுக்குக் காட்டும்படி கர்த்தரிடம் கேளுங்கள். எதற்காக நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், மற்றவர்கள் வாழ்வில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நீங்கள் வாழ்ந்து பிறரை ஆசீர்வதிப்பது எப்படி என்றும் காட்டும் படி ஜெபியுங்கள்.
Scripture
About this Plan
நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
More