YouVersion Logo
Search Icon

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிSample

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

DAY 9 OF 10

துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் 

2019 ஆம் ஆண்டின் உலக கவனிப்புப் பட்டியலானது உலகம் முழுவதிலும் தங்கள் விசுவாசத்திற்காக துன்பப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களைப் பற்றிய தொகுப்பு அறிக்கையை வெளியிட்டது.  2016-2017 ஆம் ஆண்டில் மட்டும்  2 கோடியே 45 லட்சம் கிறிஸ்தவர்கள் அதிக அளவிலான துன்புறுத்தல்களை அனுபவித்திருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.  உலக கவனிப்புப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் ஒவ்வொரு மாதமும் 105 ஆலயங்கள் தாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 11 கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்துக்காகக்  கொலை செய்யப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையும் உண்மையான நிலையைச் சொல்லவில்லை. ஏனென்றால் இவை உண்மையான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுத்திருப்பதால் அவர்கள் பெரும் விலைக்கிரயத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வு ஆபத்தானது. நாம் தீவிரமான, உயிருக்கு ஆபத்தான துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கலாம். ஆனால் நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம் என்ற உண்மையே நமக்கு பிரச்சனைகளைக் கொண்டு வரலாம்.  நாம் சாந்த குணமுள்ளவர்களாக, சமாதானத்தை விரும்புகிறவர்களாக, தேவன் மீது பசி தாகம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக, இரக்கமுள்ளவர்களாக இருப்பதுவே நமது வேலையில், பள்ளிகளில், குடியிருக்கும் இடங்களில் மென்மையானதும் தீவிரமானதுமான தாக்குதல்களுக்கு நம்மை முதன்மையான இலக்குகளாக்குகின்றன. அப்படிப்பட்ட துன்புறுத்தல்களை நாம் எதிர்பார்த்திருக்கவும் அவற்றுக்காக மகிழ்ச்சியுடன் இருக்கவும் இயேசு நம்மைக் கேட்டுக் கொள்கிறார். ஏனென்றால் இவ்வாறாகத் தான் ஆதிகாலத்தில் தீர்க்கதரிசிகளும் நடத்தப்பட்டார்கள். இங்கே சுவராசியமான உண்மை என்னவென்றால் உடனடியாக உலகத்தில் எந்த பலனும் கிடைக்கும் என்று சொல்லவில்லை. நித்தியத்தில் தான் பலன் கிடைக்கும் என்று உறுதி கொடுக்கிறார். 

கிறிஸ்துவின் சீடனாக நீங்கள் இந்த பயணத்தை மேற்கொள்ளும் போது பரலோகத்தில் பலன் இருக்கிறது என்பதால் துன்பங்களை சகிக்கவும் அதற்காக மகிழ்ச்சியாக இருக்கவும் ஆயத்தமாக இருக்கின்றீர்களா?  

Day 8Day 10

About this Plan

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.

More