YouVersion Logo
Search Icon

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிSample

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

DAY 4 OF 10

பலவீனமானவர்கள் அல்ல, சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

சாந்த குணமுள்ளவர்கள் அல்லது தாழ்மையானவர்கள் எனப்படுபவர்கள், அதிகாரம் அல்லது அந்தஸ்து இருந்தாலும் கூட தங்களது வாழ்வைக் கர்த்தரின் சித்தத்துக்கு முழுவதுமாக அர்ப்பணித்தவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் அதிகாரத்தையோ அந்தஸ்தையோ வெளியே காட்ட வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. சாந்த குணத்துக்கு முதன்மையான எடுத்துக்காட்டு இயேசு தான். அவர் உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தப்பட்டார். கேவலப்படுத்தப்பட்டார். கொடுமைப்படுத்தப்பட்டார். பட்டப் பெயர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அவரால் ஒரே வார்த்தையில் ஆயிரக்கணக்கில் தேவ தூதர்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும். சாந்த குணமுள்ளவர்கள் இந்த உலகத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று இயேசு சொன்னார். எதையும் சாதிப்பவர்களும் உயரத் துடிப்பவர்களும் தான் தங்களைச் சுற்றியிருப்பவற்றில் அதிகப்படியானவற்றை ஆட்சி செய்வார்கள் என்று இருக்கும் உலகத்தில் இந்த கூற்றானது, வேற்று உலகத்துக் கொள்கை போலத் தோன்றுகிறது. சாந்த குணம் என்பதற்கான செம்மொழி கிரேக்க சொல்லானது ‘ப்ராஸ்’ என்பதாகும். இதற்கு போர்க்குதிரைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குதிரைகள் ராணுவத்தில் போருக்காகவே இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன. அவை எந்த நேரத்திலும் போருக்கு ஆயத்தமாகவே இருக்கும். அவை மிகவும் ஆற்றல் மிக்கவைகளாக இருக்கும். அவற்றின் ஆற்றலுக்கும் மேலாக அவை அதிகமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கும். மிக அதிகமான கீழ்ப்படிதல் உள்ளவைகளாக இருக்கும். ஆகவே இந்த சொல்லை வேறு வகையில் மொழியாக்கம் செய்தால், சாந்த குணம் என்பதற்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆற்றல் என்று பொருள் கொள்ளலாம். 

இயேசுவைக் கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொண்ட நாம் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையானது கிடைக்கின்றது. ஆனால் உண்மையான சாந்த குணம் உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றால் நாம் அவருக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் யாருக்குச் சொந்தமானவர்கள் என்பதை அறிந்திருந்து, கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதைப் புரிந்து இருப்பது நமக்கு உறுதியாக சாந்த குணத்தை அடைந்து விளைவுகளுக்காகக் கர்த்தரை சார்ந்திருப்பதை சாத்தியமாக்கும். சாந்த குணம் உள்ளவர்கள் பலவீனர்கள் அல்ல, அவர்கள் செல்வந்தர்கள். ஏனென்றால் அவர்களது பிதாவானவர் பூமியை அவர்களுக்கு சொந்தமாக சுதந்தரமாகக் கொடுக்கிறார். 

Day 3Day 5

About this Plan

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.

More