YouVersion Logo
Search Icon

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிSample

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

DAY 2 OF 10

எளிமையானவர்கள் பாக்கியவான்கள்

இந்தப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள ஏழ்மை என்பது ஆன்மீகத்தில் எளிமை என்பதாகும். கிறிஸ்து தங்கள் வாழ்வில் இல்லாமல் ஆன்மீகத்தில் தாங்கள் எத்தனை தரித்திரமாக, அல்லது வெறுமையாக இருக்கிறோம் என்பதையும் அறிந்தவர்கள் தான் இவர்கள். கர்த்தரின் தேவையை அறிந்தவர்களாக வேறு வழியே இல்லாமல் அவர் மீது சார்ந்திருப்பவர்கள் தான் ஆன்மீகத்தில் ஏழ்மையானவர்கள். கர்த்தரின் அரசு அவர்களுக்கு உரியது என்பதுவே இயேசு அவர்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தமாகும். கர்த்தரின் அரசின் சொத்துரிமையானது தாங்கள் தங்கள் பெலத்தில் எத்தனை குறைவு உள்ளவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, எல்லாவற்றிற்காகவும் எதற்காகவும் அரசரையே சார்ந்து இருப்பவர்களுக்கு உரியது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். 

நமது முக்கியமில்லாத தன்மையைப் புரிந்து கொள்வது தானாகவே கிறிஸ்துவே போதும் என்ற உண்மையை உயர்த்திவிடும். 

இன்று, நீங்கள் எந்த அளவுக்கு ஆன்மாவில் ஏழ்மையானவராக இருக்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? (கொலோசேயர் 1:27) அவர் இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் அறிந்திருக்கிறீர்களா? (யோவான் 15:5) 

இயேசு உங்களை ஒரு ஏழ்மையான ஆத்துமாவாக, அவரை சார்ந்திருக்கும் ஒரு நபராகப் பார்ப்பதில்லை. அவர் உங்களை மாபெரும் மனதுருக்கத்துடனும் அன்புடனும் பார்க்கிறார். நீங்கள் பலவீனமாக இருக்கும் பகுதிக்கு அவர் வந்து உங்களை நித்தியத்துக்கும் உறுதியானவராக்குகிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவரைக் கேட்பது தான்!

Day 1Day 3

About this Plan

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி

நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.

More