மனதின் போர்களம்Sample
அவிசுவாசத்தின் கீழ்ப்படியாமை
“நான் விசுவாசிக்கிறேன்,” என்று சொல்வது சுலபம். ஆனால், நமக்கிருக்கும் விசுவாசத்தை செயல்படுத்துவதுதான் உண்மையான ஒரு பரீட்சையாகும். சீரியரிடமிருந்து விடுவிக்கப்பட ராஜா, தீர்க்கதரிசியாகிய எலிசாவின் உதவியை நாடி அவனிடம் வந்தான். தீர்க்கதரிசி, ராஜாவை அம்புகளை தரையிலே அடிக்கச் சொல்லுகிறான். அதுவே இஸ்ரவேல் தன் எதிரியாகிய சீரியாவை முறியடிக்கும் அடையாளம் என்றான். ராஜாவோ, மூன்று முறை மாத்திரம் தரையில் அடித்து நிறுத்திவிட்டான்.
அவிசுவாசமும் ஒரு விதமான கீழ்ப்படியாமையாகும். ராஜா, தீர்க்கதரிசி சொன்னதை அப்படியே விசுவாசித்திருந்தால், நிறைய தடவைகள் அம்பை தரையிலே அடித்திருப்பான். அவனுடைய அவிசுவாசத்தினால் அவன் ஆரம்பித்த உடனே நிறுத்திவிடுகிறான். அதனால் எலிசா அவன்மேல் கோபப்படுகிறான்.
அவிசுவாசத்தினால் ஏற்பட்ட காரியங்களைக் குறித்த அநேக சம்பவங்களை; நாம் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் காணமுடியும். எந்த பக்கம் திரும்பினாலும், அவநம்பிக்கையையும் நாம் காண முடியும். (மத்தேயு 17:14-20)ல் ஒரு மனுஷன், சந்திரரோகியான தன் மகனை இயேசுவினிடத்தில் கொண்டு வருகிறான். “அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன்; அவனை சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்று இயேசுவிடம் கேட்கிறான் (வ.16).
சீஷர்கள், தங்கள் தலைவரைப் போல வல்லமை நிறைந்தவர்களாய், சொஸ்தமாக்கக்கூடியவர்களாய் இல்லாததைக் குறித்து, அந்தப் பையனின் தகப்பனார் ஏமாற்றமடைந்தவராய் இருந்தார். நாமும் அவர் இருந்த நிலைமையில் இருந்தால், அப்படித்தான் இருந்திருப்போம். இயேசுவானவர் தன் பன்னிரெண்டு சீஷர்களுடனும் பல மாதங்களாக பிரயாணம் பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் செய்த எல்லா அற்புதங்களையும் அவர்கள் கூட இருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். லூக்கா 10ஆம் அதிகாரத்தில், இயேசு வேறு எழுபது பேரையும் இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். அவர்கள், இயேசுவின் நாமத்தினாலே அநேகரை சொஸ்தப்படுத்தி, அநேக அற்புதங்களையும் செய்தார்கள். ஆனால், இந்த சந்தர்ப்பத்திலே, சீஷர்களால் ஏன் ஒன்றும் செய்ய முடியாமல் போனது? இயேசுவானவரோ தொடர்ந்து வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், அவர் செய்யும் காரியங்களை சீஷர்களும் செய்யவும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார்.
இருந்தும், அவர்களால் அந்தப் பையனை சொஸ்தப்படுத்த முடியாமற் போயிற்று. இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார் (வ.17). இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டு புறப்பட்டது. அவிசுவாசம் கீழ்ப்படி யாமைக்குள் நடத்துகிறது.
ஆனால், சம்பவம் இங்கு முடிவு பெறுகிறது. அப்பொழுது சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: அதை துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற் போயிற்று என்று கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு சொன்ன பதில்: “உங்கள் அவிசுவாசத்தினாலே தான்...” (வ.20), என்றுத் தெளிவாயிருக்கிறது.
இயேசு சொன்ன பதில், அவர்களைத், தங்களை தாங்களே பரிசோதிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அவர்கள் ஏன் விசுவாசிக்கவில்லை? பிற்போக்கான எண்ணங்களுக்கு, ஒரு வேளை தங்கள் மனதிலே இடம் கொடுத்துவிட்டார்களா? அல்லது, இயேசு அவர்களை பெலப்படுத்தி, அற்புதங்களை செய்ய வைக்க விரும்புகிறார் என்பதை, கிரகித்துக்கொள்ளாமல் போனார்களோ என்பது தெரியவில்லை.
அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்திலே, அபிஷேகத்தைப் பெற்ற பின்; இதே சீஷர்கள், வியாதியஸ்தர்களை சுகமாக்கியது உண்மைதான். ஆனாலும், இந்த சம்பவத்திலோ அவர்களால் ஒன்றும் செய்ய கூடாமற்போயிற்று. “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவான் 14:12), என்று இயேசு அவர்களுக்கு சொன்னார்.
இந்த வாக்குத்தத்தம், இந்த நாளிலும் மாறாததாயிருக்கிறது. தேவன் நம்மை எதற்கென்று அழைத்து, அபிஷேகித்திருக்கிறாரோ, அதைச் செய்ய முடியாதபடி, அவிசுவாசம் நம்மை தடுத்துவிடும். நமக்குள் உணரும் சமாதானத்தை, அது தடைசெய்து, நம்முடைய ஆத்துமாவிற்கு அவர் தரும் இளைப்பாறுதலை, அனுபவிக்க முடியாமல் செய்து விடும் (மத்தேயு 11:28,29 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்).
நம்மால் எதையாவது செய்ய முடியும் என்று தேவன் சொல்வாரானால், நம்மால் அதை செய்ய முடியும் என்று நாம் விசுவாசிக்கவேண்டும். அவர் நம்மை செய்யச் சொல்லும் காரியத்தை, நம்முடைய பெலத்தினாலோ, பராக்கிரத்தாலோ, நாம் செய்ய முடியாது. ஆனால் அவருடைய ஆவியானவராலே, நமக்குள்ளாகக் கிரியைச் செய்து, நமக்குள்ளிருக்கும் அவிசுவாசப் போராட்டத்தை ஜெயிக்க தேவன் உதவி செய்வார்.
ஆண்டவரே, என் விசுவாசக் குறைவை எனக்கு மன்னியும். உம்மை விசுவாசியாத போதெல்லாம், உமக்கு நான் கீழ்ப்படியவில்லை என்பதை அறிவேன். உம்முடைய நாமத்தினாலே, நான் எல்லா அவிசுவாசத்தையும் தள்ளிவிட்டு, உம்மை பின் தொடருவதில் என் கவனத்தை முழுவதுமாக செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்.
Scripture
About this Plan
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More