YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 60 OF 100

விசுவாசத்திலிருந்து விசுவாசம்

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது, அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று - “விசுவாசம்”. தெசலோனிக்கியருக்கு எழுதும் போது, அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்துப் பவுல் அறிய விரும்பு கிறதை நாம் பார்க்கிறோம். “விசுவாசம்” என்ற வார்த்தையின் பொருள் - விசுவாசிப்பது, முழுவதுமாக நம்புவதாகும். மேலும் - அந்த வார்த்தை - நம்பிக்கைக்குறியத் தன்மை, அர்ப்பணிப்பு ஆகியவைகளையும் குறிக்கும்.

ஒரு காரியம் உண்மை, நிஜம் என்று நம்புவது தான் விசுவாசமாகும். ‘கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்;” என்று 1 கொரிந்தியர் 15:17ல் பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அதாவது, அவர்கள் விசுவாசத்தவைகள் எல்லாமே வீண் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலின் உண்மையை அங்கீகரிப்பதே; மெய்யான விசுவாசமாயிருக்கிறது.

தேவன் பேசுவதை கவனித்து, அதை ஏற்றுக்கொள்ளும்போதே, உண்மையான விசுவாசம் ஆரம்பமாகிறது. இது ஒத்துக்கொள்ளக் கூடியதும், உண்மையாக இருப்பதையும்; முதலில், மனதளவில் நாம் இணங்குவதில் ஆரம்பிக்கிறது. ஆனால், இப்படி மனதளவில் நாம் இணங்குவது மாத்திரம் உண்மையான விசுவாசம் ஆகாது. அது எனக்கு அர்த்தமுள்ளதாக இருப்பது மட்டுமல்ல, “அதற்காக நான் என் வாழ்க்கையையே பணயம் வைக்கவும் விரும்புகிறேன்” என்று சொல்வது தான் உண்மையான விசுவாசம்.

“தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று ஆபகூக் 2:4ல் இருந்து பவுல் குறிப்பிடுகிறார். “நீதிமான்” என்ற வார்த்தையை யோசித்தால், “நீதி செய்வது,” அல்லது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் “நீதியாக மாற்றப்பட்டது”என்றுதான் சொல்லவேண்டும். நாம் பாவமே செய்யாததைப் போன்றும், பாவிகள் இல்லை என்பது போலவும், தேவன் நம்மை நடத்துவது என்றுதான் பொருள். அவர் நம்மை, அவருடைய சொந்த, அருமையான, பிள்ளைகளாக நடத்துகிறார். தேவனுக்கு எதிரிகளாக இருப்பதற்கு பதிலாக, அவருக்கு நண்பர்களாக மாறிவிட்டோம். அவருக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக, அவருக்கு ஊழியம் செய்கிறோம்.

தேவன் நம்மை “நீதிமான்” என்று அழைத்திருக்கும்போது, நாம் அவருடைய அன்பின், நம்பிக்கையின், நட்பின் உறவுக்குள்ளாக பிரவேசிக்கிறோம், நமக்கு ஆக்கினைத் தீர்ப்பு என்பதில்லை. அதனால், நாம் பயப்படவோ, கலங்கவோ, அவசியமில்லை.

“விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்,” என்று பவுல் சொல்லும்போது, தேவனாலே நீதிமான்களாக ஆக்கப்பட்டிருக்கிற நாம், நம்முடைய விசுவாசத்தினாலே வாழுகிறோம் என்ற அர்த்தத்தில் அவர் சொல்லுகிறார். அதாவது, நமக்கு உதவி செய்ய விரும்புகிற தேவனையே விசுவாசிப்பதாகும்.

இந்த இடத்தில்தான், சாத்தானுடைய தந்திரங்களை நாம் எதிர்த்து போராடியே ஆக வேண்டும். தேவன் நமக்காக நிறைவேற்றியிருப்பவைகள் எல்லாவற்றிலும் நாம் கவனம் செலுத்த முடியாதபடிக்கு, “நீ கோபப்பட்டது உனக்கு நினைவிருக்கா?” “உன் செலவுகளை சந்திக்க நீ ரொம்பவும் கவலைப்படுகிறாய், இப்படி நீ கவலைப்படுகிறபடியால், உனக்கு விசுவாசமே இல்லை, சரிதானே?” “நீ விசுவாசியாக இருந்தால், நீ இப்படியெல்லாம் பேசலாமா?” என்று பிசாசு மெல்லச் சொல்லுவான்.

நம்முடைய கடந்த கால தோல்விகளை சுட்டிக்காட்டி, நம்மை பாடுபடுத்தும் வாய்ப்புகளை பிசாசு ஒருபோதும் தவறவிடமாட்டான். எல்லோரும் தவறு செய்திருக்கிறோம். இனியும் தவற வாய்ப்புண்டு. ஆனால், ஒருவேளை அப்படி செய்துவிட்டாலும், நாம் அதற்கு மனஸ்தாபப்பட்டு, தொடர்ந்து முன்னேற முடியும்.

பல வருடங்களுக்கு முன்பாக, கொஞ்சங்கூட மகிழ்ச்சியும், சந்தோஷமும் இல்லாத அளவுக்கு என் வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன். அந்த நாட்களில் பெரும்பாலும் மகிழ்ச்சியை இழந்து நான் வாழ்ந்தேன். நான் என்ன தவறு செய்தேன், என் பிரச்சனை என்ன; என்று உண்மையாகவே தெரிந்து கொள்ள விரும்பி; பலமுறை தேவனிடம் கேட்டேன். நான் எப்படிப்பட்ட விசுவாசியாக இருக்கவேண்டுமென்று நினைத்தேனோ, அதற்காக நான் கடினமாக முயற்சி எடுத்தாலும், எந்த முன்னேற்றமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

பிறகு ஒரு நாள், வசன அட்டைகள் இருந்த ஒரு பெட்டியில், ரோமர் 15:13ஐ நான் பார்த்தேன். “பரிசுத்த ஆவியின் பெலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக”. இதுதான், எனக்கு தேவை என்று அதை பிடித்துக் கொண்டேன்!

பிசாசானவன், அவனுடைய வஞ்சகத்தினால் என்னைத் துன்புறுத்த நான் இடம் கொடுத்திருந்தபடியால், நான் சந்தேகத்திலும், அவிசுவாசத் திலும் தள்ளப்பட்டேன். இதன் விளைவாக, நான் எதிர்மறையாகி, எரிச்சலடைந்து கோபப்பட்டேன். பொறுமையிழந்து, என்னை நானே பாழாக்கிக்கொண்டேன். இதைக்கண்ட பிசாசு மிகவும் சந்தோஷப்பட்டான்!

இந்த வசனம், என்னுடைய எல்லா பழைய நினைவுகளையும் மாற்றிப் போட்டது. எனக்கு விடை தெரிந்தது. இயேசுவானவர் என்னுடைய கடந்தக்கால பாவங்களை மன்னித்தது மட்டுமின்றி, நான் எதிர்காலத்தில் தவறப்போகிற என்னுடைய பலவீனங்களையும், மன்னிக்குமளவுக்கு இயேசு என்மேல் அன்பாயிருக்கிறார். வேண்டுமென்றே, துணிந்து செய்கிற பாவத்தைக் குறித்து நான் சொல்லவில்லை. மனுஷர்களாகிய நாம், நம்முடைய பலவீனத்தில் தவறுகிறோமே, அதைக்குறித்து தான் சொல்லுகிறேன்.

“நான் அவரை அறிந்துகொள்வதற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, இயேசு என்னுடைய எல்லா பாவங்களுக்காக மரித்தது மட்டுமின்றி, நான் அவரை முகமுகமாய் சந்திக்கும் நாள் வரைக்கும், நான் செய்யக்கூடிய தவறுகளுக்காகவும், என்னுடைய பலவீனங்களுக்காகவும், தோல்விகளுக்காகவும்; அவர் மரித்திருக்கிறார். இதை யோசித்துப் பாருங்கள்”. இது ஒரு வல்லமையான வெளிப்பாடு.

பின்பு, ஆரம்பத்தில் நாம் பார்த்த, பவுல் கூறியிருக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்க ஆரம்பித்தேன். “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினாலே வெளிப்படுத்தப் படுகிறது”. இதிலிருந்து, நான் விசுவாசத்தின் ஒரு நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கு முன்னேறுவது என்றால் என்ன என்பதை கடைசியில் புரிந்து கொண்டேன். சாத்தான் தன்னுடைய சந்தேகத்தை எனக்குள் திணிக்க, நான் அனுமதிக்கத் தேவையே யில்லை. நான் இனிமேல், ஒவ்வொரு முறையும், “விசுவாசத்தின் மேல் விசுவாசம்” என்றும், இன்னும் அதிகமான விசுவாசத்தை நோக்கி முன்னேற முடியும்.


அன்புள்ள ஆண்டவரே, நான் பிறப்பதற்கு முன்னதாகவே, நான் செய்யப்போகும் பாவங்களுக்காகவும், உம்மை அறிந்த பிறகும் என்னுடைய பலவீனத்தில் நான் செய்த தவறுகளுக் காகவும்; இனிமேல் வரும் தோல்விகளுக்காகவும் எனக்காக, என் மேலுள்ள அன்பினிமித்தம் நீர் மரித்தீரே, அதற்காக என் உள்ளம் உவகையடைகிறது. உம்முடைய அன்பிற்காக மிகவும் நன்றி. உம்முடைய பரிசுத்த நாமத்தில், நான் அகமகிழ்கிறேன். ஆமென்.

Day 59Day 61

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More