YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 61 OF 100

பிசாசு திருட இடங்கொடாதீர்கள்

அன்றாட வாழ்க்கையில், எந்த நேரத்திலும், எந்தக் காரியத்திலும், நடைமுறைப்படுத்தக்கூடிய, வாழ்க்கைக்கு உதவும் பாடங்கள் அடங்கிய உதாரணங்களை, இயேசு ஜனங்களுக்கு அடிக்கடியாகக் கொடுத்தார். பத்து தாலந்துகளின் உவமை, அப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டாகும். இயேசு வாழ்ந்த நாட்களில், ஒரு தாலந்து என்று சொல்லுவது, இந்நாட்களில் ஒரு ஆயிரம் தாலந்திற்கு சமானம். இந்தக்குறிப்பிட்ட உவமையில்; ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில், இரண்டு சுவாரஸ்யமான குறிப்புகளை நான் பார்க்கிறேன். முதலாவதாக, அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக இந்த மனுஷன் தன் தாலந்துகளை கொடுக்கிறான்.அவர்கள் திறமைக்கு மிஞ்சி அவர்களிடம் கொடுத்து, அவர்கள் அதை நிர்வாகம் செய்ய முடியாமல் அவர்களை கஷ்டப்படுத்தவில்லை. அதிகமான தாலந்துகளை வாங்கிய, முதல் இரண்டு வேலைக்காரர்களும், திறமையாக வியாபாரம் பண்ணி, அவைகளை இரண்டு மடங்காக்கினார்கள். அவர்களுடைய எஜமான் திரும்பியதும், அவர்களை மெச்சியதோடல்லாமல், வியாபாரத்திலும் அவனோடு பங்கு கொண்டனர். நான் கவனித்த மற்றொரு காரியம், இருவரும் தங்கள் திறமையோடு, ஞானமாக தாலந்துகளைப் பயன்படுத்தினதற்காக, அநேகத்தின் மேல் அவர்களை அதிகாரியாக வைத்தான். இருக்கிறதிலேயே கொஞ்சம் தாலந்துள்ள மனுஷன் - மூன்றாவது ஊழியக்காரன் செய்யத் தவறினான்.

இதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அந்த மூன்றாவது ஊழியக் காரன் மூன்று, அல்லது ஐந்து தாலந்துகளைக் கொண்டு வியாபாரம் செய்யவேண்டும் என்று எஜமான் எதிர்பார்க்கவில்லை. இந்த மனுஷன் அப்படிப்பட்ட வேலைகளை செய்யமுடியாதவன் என்று எஜமான் அறிந் திருந்தான். அதனால்தான், அவனுக்கு இருப்பதிலேயே மிகவும் கொஞ்சமான வேலையைக் கொடுத்தான். இருந்தும், அவன் அதையும் செய்யத் தவறினான். தான் செய்யாமல் இருந்துவிட்டு, அதற்கு மேல் தன் எஜமானையும் குற்றப்படுத்துகிறான். எவ்வளவு மோசம் பாருங்கள்! அந்த ஊழியக்காரன் சொன்ன ஒரு காரியத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு இரகசியம் அடங்கியிருக்கிறது - “ஆகையால், நான் பயந்து போய் உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்...” (வ.25 ஐ பார்க்க).

அவன் அந்தத் தாலந்தை தொலைக்கவில்லை. ஆனால், அதை ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தான். அதற்கு அந்த எஜமான், “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே,” என்று கடிந்து கொள்ளுகிறான். பயத்தின் ஆவி, அந்த ஊழியக்காரனை எதுவும் செய்யாமல் தடுத்துவிட்டது (வ.25).

“அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டு வைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே,” என்று அவனுடைய எஜமான் சொன்னான் (வ.27). ஒருவேளை, தன் எஜமான் சொன்னதுபோல, அவன் காசுக்காரரிடத்தில் (வங்கியில்) அந்தத் தாலந்தைப் போட்டு வைத்திருந் தாலும், மற்ற இரண்டு பேர் சம்பாதித்த அளவுக்கு அவனால் சம்பாதித் திருக்க முடியாது. இருந்தாலும் பரவாயில்லை, அவனுடைய எஜமான் அவனிடம் எதிர்பார்த்தது எல்லாம், எதையாவது அந்த ஊழியக்காரன் செய்திருக்கவேண்டும் என்பதே. - எஜமான் எதிர்பார்த்தது நியாயம் தானே!

மற்றவர்களோடு நாம் நம்மை ஒப்பிட்டு, உன்னைவிட அவர்களுக்கு அதிகம் தாலந்து இருக்கிறதே என்று சொல்லி, பிசாசு கண்ணியை விரிப்பான். அல்லது, நம்மைவிட மற்றவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது என்றும் சொல்லுவான். ஆனால், மற்றவர்களிடம் ஒப்புவித்த வேலையை, நாம் செய்யவேண்டும் என்று தேவன் எதிர் பார்ப்பவரல்ல. நமக்குக் கொடுத்திருக்கிற தாலந்துகளையும், திறமைகளையும், நாம் உபயோகிக்கவேண்டும் என்று அவர் எதிர் பார்க்கிறார்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும், தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை நான் உண்மையாகவே நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அதற்கு அப்படியே கீழ்ப்படிந்து நாம் வாழும்போது, அவருடைய திட்டமானது நம்முடைய கண்களுக்கு முன்பாகவே நிறைவேறுவதை நாம் காணமுடியும். நமக்கிருக்கும் கொஞ்சத்தை, பயந்துபோய் கெட்டியாக பிடித்துக்கொள்வோம் என்றால், தேவனுடைய திட்டம் நிறைவேறாது. இன்னும் பார்த்தால், நம்முடைய இந்த மனப்பான்மை, பிசாசு நம்மிடத்தில் அவனுடைய பொய்களைச் சொல்லி, தேவனுடைய திட்டத்தையும் அதைக் குறித்த தரிசனத்தையும் நாம் விட்டுவிட ஏதுவாக செயல்படும்.

“பயம்” என்பது, இந்த பொல்லாத, சோம்பலான ஊழியக்காரனைப்போல நம்மை மாற்றும். பிசாசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால், நம்மால் ஒன்றும் செய்யமுடியாதுதான். நாம் செய்வதெல்லாம், தோல் வியில் முடியம் என்று நம்மை நம்ப வைப்பான். ஆனால், தேவனுடைய சத்தத்தை நாம் கவனித்துக் கேட்டால், “நல்லது, உத்தமும் உண்மையுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி,” என்று சொல்லுவார். நாம் எவ்வளவு சாதித்தோம் என்பது முக்கியமல்ல, கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் திறமையின்படி நாம் எவ்வளவு உண்மையாய் செயல்பட்டோம் என்பதுதான் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறது.


அன்பும் கரிசனையும் நிறைந்த பிதாவே, இந்த மூன்று பேரில் யாரைப்போல என்னுடைய திறமையில் நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எனக்காக நீர் வைத்திருக்கும் உம்முடைய திட்டத்தை உண்மையுடன் நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். எனக்கு உதவுவதற்காக உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் உமக்கு நன்றி. எனக்கு, நீர் தந்த கொஞ்சத்தையும் எதிரியானவன் திருடிவிடாதபடி நான் அதை காக்க, எனக்கு உதவி செய்கிறபடியால் உமக்கு நன்றி. ஆமென்.

Day 60Day 62

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More