YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 57 OF 100

ஒரு கவர்ந்திழுக்கும் சோதனை!

இயேசுவானவர் நாற்பது நாள் உபவாசத்தை முடித்தவுடனே, பிசாசானவன் மூன்று விதமான சோதனைகளுடன் அவரை அணுகினான். இயேசுவானவர் தன் உபவாசத்தை முடித்து, சரீரத்திலே பசியும், பெலவீனமும் அடைந்தபோது பிசாசானவன் அவரிடம் வந்தான். இயற்கையாகவே அத்தனை நாட்கள் உபவாசம் இருந்தால், சரீரம் பெலவீனமடையவும், பசியுண்டாகவும் முடியும். அதனால் தான் முதலாவதாக உணவை சம்பந்தப்படுத்தி, அவரை சோதிக்க முயன்றான். “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்,” என்றான் (வ.3).

நாம் இதற்கு பிறகு பார்க்கும்போது, இயேசுவானவர் அநேக அற்புதங்களை செய்தார். ஒரு சிறு பையன் கொண்டு வந்த ஐந்து அப்பம் இரண்டு மீனை, ஐயாயிரம் மக்களுக்கு போஷித்தார். மற்றொரு சமயமும், நாலாயிரம் பேரை போஷித்தார். அவருடைய அற்புதங்கள் எப்பொழுதுமே மற்றவர்களுடைய நலனுக்காகவே இருந்தது. தன்கென்று, தன்னுடைய தேவைகளை திருப்தி செய்யவோ; அவர் ஒருக்காலும் ஒரு அற்புதமும் செய்யவில்லை. இந்த சோதனையை அவர் சந்தித்ததில், நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பெரிய பாடமும் இதுதான்.

பின்பு பிசாசு, அவரை உயரமான மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல இராஜ்யங்களையும், அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் ஒரு முறை பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்றான். “பரவாயில்லை, நீர் பெலவினமாயிருக்கிறீர் என்பதை தேவன் அறிவார்.” 

என்ன இருந்தாலும் நீர் தான் அனைத்தையும் ஆளப்போகிறீர், இது ஒரு குறுக்கு வழி என்று சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன். இயேசுவானவர் தள்ளப்படுவதையும், பாடுபடுவதையும், சிலுவையில் பயங்கரமாக வதைக்கப்படுவதையும் தவிர்த்து, அவர் இப்படியும் தன்னுடைய இலக்கை அடையமுடியும் என்று; அவனை விழுந்து வணங்கும் அந்த ஒரு சிறிய செயலின், மூலம் இதை சொல்லாமல் சொல்லுகிறான். 

எவ்வளவுதான் கவர்ச்சிகரமாக பிசாசு அவரை சோதிக்க முற் பட்டாலும், இயேசு அவனை புறம்பேத் தள்ளினார். அவன் வேண்டுமென்றே வஞ்சகமாக தீட்டியிருக்கும் பொய்யை கண்டுபிடித்து விட்டார். அவனை விரட்ட அவர் தயங்கவில்லை. உலகம் தேவனுக்கென்று, ஆதாயப் படுத்தப்படவேண்டும். ஆனால் கீழ்படிதல், தியாகம் ஆகியவைகளின் மூலம்தான் ஜெயிக்கப்படவேண்டும். சிலுவையின் பாதையே இயேசுவின் வெற்றிக்கு வழியாகும்.

மறுபடியும் இயேசு நமக்கு கற்றுதரும் பாடம், அவருடைய வழி இலகுவானதல்ல என்பதாகும். சரியான வழியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் பிசாசு - இந்த வழி சுலபமானது - மேலானது - என்று சொல்லும்போது - நாம் அவனுக்கு செவிகொடுக்கக் கூடாது.

நாம் இதைப் படிக்கும்போதே, நாம் எதை தெரிந்துகொள்ளவேண்டும் என்பது நமக்குப் புரியும். ஒருவேளை, நீங்கள் சாப்பாடும் தண்ணீரும் இல்லாமல் நாற்பது நாட்கள் வனாந்திரத்தில் இருப்பீர்களானால், அல்லது அப்படிப்பட்ட பெரிய போராட்டங்களை சந்தித்திருப்பீர்களானால்; பிசாசானவன் உங்கள் காதுகளில், “இந்த ஒரு முறை மட்டும், யாருக்கும் தெரியாது,” என்று முணுமுணுத்தால் என்ன செய்வீர்கள்?

இது பிசாசினுடைய தந்திரங்களில் ஒன்று. நீங்கள் விரும்பும் காரியத்தை அடைய, உங்களுக்கு உதவி செய்வது போலவும், அது மிகவும் எளிதாக, இலகுவாக இருப்பது போலவும்; “இந்த ஒரு காரியத்தை மட்டும் நீ செய், பிறகு எல்லாம் உன்னுடையது,” என்று சொல்லுவான்.

தேவன், ஒருபோதும் இப்படிச் செயல்படுகிறவர் அல்ல. சிறந்ததை நீங்கள் பெறவேண்டும், சிறந்ததையே பெற்றுக்கொள்ளவேண்டும்; அதுவும், சரியான வழியில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் அவர் விரும்புவார்.

இந்த சோதனைகளைக் குறித்து எழுதி முடிக்கும் போது, மத்தேயு மிகவும் அருமையான ஒரு காரியத்தை எழுதுகிறார். இயேசுவானவர் தேவனுடைய குமாரனாயிருந்தும், தேவனுடைய வார்த்தையை தன்னுடைய பெலமாகக் கருதி, சார்ந்திருந்தபடியால், ஒவ்வொரு சோதனையையும் எளிதில் மேற்கொள்ள அவரால் முடிந்தது. பிசாசு, தேவனுடைய வார்த்தைக்கு எதிராக போரிட முடியாது. முடிவில், மத்தேயு இப்படியாக: “அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள் (வ.11), என்று எழுதுகிறார். 

இந்த அனுபவத்திலிருந்து நாம் சேகரிக்கக் கூடிய ஞானம் மிகவும் வல்லமையானது. நீங்கள் என்னதான் சோதிக்கப்பட்டு, பிசாசினால் இழுக்கப்பட்டாலும், கர்த்தர் உங்களை விட்டுவிட மாட்டார். அவர் உங்களோடு கூட இருந்து, உங்கள் தேவைகளை சந்தித்து, ஆறுதல் அளித்து, உங்களை உற்சாகப்படுத்துவார். அவருடைய பெயரை சொல்லிக் கூப்பிடும் போதே,அவர் உங்கள் அருகிலிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். அவர் உங்களை விட்டு விலகுவதும் இல்லை, உங்களை கைவிடுவதும் இல்லை.


ஆண்டவரே, பிசாசை நீர் ஜெயித்ததற்காக உமக்கு நன்றி. பிசாசு சொன்ன காரியங்களை கேட்காமல், தேவனுடைய வார்த்தையின்மேல் உறுதியாக நின்றீரே உமக்கு நன்றி. உம்முடைய நாமத்தினாலே, நீர் தரும் ஞானம், பெலன் இவற்றை பெற்று, அதே எதிரியை நானும் ஜெயிக்க, சோதனைகளை வெல்ல, எனக்கு உதவி செய்யும். ஆமென்.

Scripture

Day 56Day 58

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More