YouVersion Logo
Search Icon

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?Sample

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

DAY 6 OF 7

பெரிய வெள்ளியன்று துயரப்படாமல், ஏன் அதைக் கொண்டாட வேண்டும்? 

“அப்பாஸ்டோலிக் கான்ஸ்டிடியூஷன்ஸ்” என்ற நான்காம் நூற்றாண்டு திருச்சபையின் கையேடு, பெரிய வெள்ளியை “விழாக்கால கொண்டாட்ட நாள் அல்ல, துக்ககரமான நாள்” என்று வர்ணிக்கிறது. பெரும் பாவியாக விளங்கிய, ஹிப்போ ஊரைச் சார்ந்த அகஸ்டின் என்ற மனிதரின் மனமாற்றத்துக்கு காரணமான, நான்காம் நூற்றாண்டின் ஆர்ச் பிஷப் அம்புரோஸ் பெரிய வெள்ளியை “நாம் உபவாசத்தோடு அனுசரிக்கும் கசப்பு நிறைந்த நாள்” என்று வர்ணிக்கிறார்.

பெரிய வெள்ளி ஒரு கவலை நிறைந்த நாள் அல்ல. இன்றும் கூட பல்வேறு இடங்களில் பெரிய வெள்ளி ஆராதனைகளில் கறுப்பு நிறம் பிரதானமாக முன்னிருத்தப்படுகிறது. அது ஒரு அடக்க ஆராதனை போலவே நடத்தப்படுகிறது.

ஆனால் பெரிய வெள்ளி ஒரு கவலை நிறைந்த நாள் அல்ல. பெரிய வெள்ளியின் மிகப்பெரிய உண்மை என்னவென்றால், இயேசு மரித்ததினால் நாம் மரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய இராஜா, நமது சிருஷ்டிகர், சிலுவையில் தம்மையே தியாக பலியாக ஒப்புக் கொடுத்தது எத்தனை ஆச்சரியமான காரியம் அல்லவா? “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13). உங்கள் கண்கள் கண்ணீரினால் நிறைந்திருக்கலாம். ஆனால் அவை கவலையின் கண்ணீர் அல்ல, மாறாக அவை ஆனந்தக் கண்ணீர்.

ஒரு பெரிய ஹீரோ “சிறிய வயதில் மரித்து விட்டார்” என்ற எண்ணத்தில் அநேகர் இயேசுவின் மரணத்தை நினைத்து வருந்தி கண்ணீர் சிந்துகின்றனர். ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்களது கண்ணீர், உடனடியாக நின்று விட வேண்டும். எவ்வித வருத்தமும் முடிவுக்கு வர வேண்டும்.

இயேசு சிலுவையில் நிறைவேற்றி முடித்தவைகள் நம்மை துயரத்தை நோக்கி அல்ல, கொண்டாட்டத்தை நோக்கி வழிநடத்த வேண்டும்! இயேசு கடந்து சென்ற மரணம்கூட இறுதியில் தோற்கடிக்கப்பட்டது, அவருக்காக மட்டுமல்ல, நம் எல்லாருக்காகவும் தான்! அவரை மரணத்துக்கு நேராக அழைத்துச் சென்ற நம்முடைய பாவங்களும் முற்றிலும் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பரிகாரம் முற்றிலும் செலுத்தப்பட்டு விட்டது. 

விழுந்து போன உலகத்தில், கொடூர சதியினால் பாதிக்கப்பட்ட நபர் இயேசு அல்ல. விழுந்த போன உலகின் மகிழ்ச்சி நிறைந்த மீட்பர் அவர்.

நீங்கள் மரிக்காவிட்டால் மரணத்தினின்று உயிர்த்தெழ முடியாது. ஆனால் உயிர்த்தெழுதலின் ஞாயிறும், பெரிய வெள்ளியும் இயேசுவின் இரட்சிப்பின் வேலையில் இரண்டு துருவங்களாக காட்சியளிக்கின்றன. இருவேறு துருவங்களின் சிறப்புத் தன்மைகளையும் ஒரே நேரத்திலோ, அல்லது ஒரே ஆராதனையிலோ நம்மால் கவனத்தில் கொள்வது சற்று கடினம். எனவே தான், உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று சிலுவை மறக்கப்படுகிறது, பெரிய வெள்ளி அன்று உயிர்த்தெழுதல் மறக்கப்படுகிறது.

சிலுவையை மட்டுமே தியானித்தால் அது முழுமையற்றது. அது முழு கிறிஸ்தவ கதையையும் சொல்வது கிடையாது. எனவே கிறிஸ்தவ தொழுகை என்பது முழுக்க முழுக்க சிலுவையை மட்டுமே மையப்படுத்தி அமைந்து விடக்கூடாது. பெரிய வெள்ளி ஆராதனையின் இறுதியில், சிலுவை முடிவல்ல என்ற உண்மையை நமக்கு நாமே உணர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்தார். பெரிய வெள்ளி மரணத்தின் நினைவு ஆராதனையாக அல்ல வாழ்வின் கொண்டாட்டமாக அமைய வேண்டும்.

 எனவே துக்கப்பட்டு, உபவாசமிருந்து, செய்த தவறுகளுக்காக வருத்தப்பட்டு மனபாரத்தினால் உங்கள் ஆத்துமா தொய்ந்து போவதற்கு பதிலாக, இயேசு கிறிஸ்துவுக்குள் உண்டான அத்தனை வாக்குறுதிகளையும் நினைத்து உங்கள் ஆத்துமா சந்தோஷத்தினால் நிறைவதாக (யோவான் 14:28). முடிவற்றதும், மாறாததுமாகிய பிதாவின் அன்பைக் குறித்த அறிவு (யோவான் 3:16) உங்களில் பெருகுவதாக.

இயேசு மரித்ததினால் நாம் ஆவிக்குரிய மரணத்தைக் காண மாட்டோம். அவர் உயிர்த்தெழுந்ததால் நாமும் என்றென்றும் உயிரோடு வாழுவோம். அல்லேலூயா! எவ்வளவு சிறந்த இரட்சகர்.

மேற்கோள்

சிலுவை வெற்றியையும், உயிர்தெழுதல் மாபெரும் வெற்றியையும் கொண்டு வந்தது. உயிர்தெழுதல், வெற்றியின் கொண்டாட்டத்தை ஊருக்கே சொன்னது; சிலுவையில் அறையப்பட்டவரின் மாபெரும் வெற்றியை அது பறைசாற்றியது” – லியோன் மாரீஸ்.

ஜெபம்

ஆண்டவரே உம்மை சிலுவைக்கு கொண்டு சென்ற என் பாவத்தை நினைத்து கவலையின் கண்ணீரையும், என்னுடைய பாவத்துக்கான பரிகாரத்தை நீர் செலுத்தி விட்டதால் ஆனந்தக் கண்ணீரையும் வடித்து, நீர் மரித்து உயிர்த்தெழுந்ததால் நான் இனி மரணத்தை காண மாட்டேன் என்ற உண்மையை உணர்ந்து, அதை மகிழ்வுடன் கொண்டாடவும் எனக்கு கிருபை அருளும். ஆமென். 

Day 5Day 7

About this Plan

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.

More