YouVersion Logo
Search Icon

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?Sample

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

DAY 1 OF 7

இயேசு கொலை செய்யப்பட்டாரா? 

கொலை என்ற வார்த்தைக்கு அகராதி கொடுக்கும் விளக்கம் “ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சட்டவிரோதமாக திட்டமிட்டு கொல்லுவதாகும்”

1. இயேசு கிறிஸ்துவின் கொலை சட்டவிரோதமானதா?

இயேசு கிறிஸ்துவின் விசாரணை சட்ட முன்னோடி இல்லாமல் நடத்தப்பட்டது. நடு இரவில் ஒரு இரகசிய முன்விசாரணைக்கு இயேசு உட்படுத்தப்பட்டார் (யோவான் 18:12-14, 19-23). யூதருடைய சட்டம் பகல் நேர விசாரணைக்கு மட்டுமே அனுமதி கொடுத்தது. முக்கியமான வழக்குகளின் விசாரணை, தேவாலயத்தில் பொதுவான இடத்தில் வைத்தே நடைபெற வேண்டும்.

நீதிமன்றம் தனது குற்றச்சாட்டுகளை தெய்வநிந்தனை பிரிவிலிருந்து பிலாத்துவுக்கு முன்பாக (லூக்கா 23:2) ரோமர்களின் துரோகப் பிரிவுக்கு மாற்றி, ரோமர்களையே அவரது மரணத்துக்கு காரணமாக்கியது. எந்தவித ஆதாரங்களும் கொடுக்கப்படாத நிலையில் (யோவான் 18:29-30) பிலாத்துவும் இயேசுவை நிரபராதி என்றே கண்டார் (யோவான் 18:38, மத்தேயு 27:18). இருந்தாலும் பிலாத்து இயேசுவை குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்காமல், நிரபராதியை சிலுவையில் அறையப்பட அனுமதி கொடுத்தார். 

2. இயேசு கிறிஸ்துவின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?

ஒரு கொலையாளி தான் நிறைவேற்றப்போகும் கொலையைக் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு செய்தால் அதை “திட்டமிட்ட கொலை” என்று சொல்கிறோம். நற்செய்தி நூல்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் யூதர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிட்டதை நாம் தெளிவாக வாசிக்கலாம். பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் வீட்டில் “வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும்” நள்ளிரவில் கூடி வந்த நிகழ்வு, எந்த அளவுக்கு அவர்கள் அந்த சதிக்கு தெளிவாக திட்டமிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது. அவருக்கு விரோதமாக சதி செய்தவர்களே அவரை விசாரிக்கவும் செய்தார்கள்.

3. இயேசுவின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது - மனிதனாலா? கடவுளாலா?

இது இன்னும் நம்மை வியக்க வைக்கும் புதிர் போன்றது. பிதாவாகிய கடவுளும், இயேசுவாகிய அவர் குமாரனும் ஏற்கெனவே இதை திட்டமிட்டிருந்தபடியால், ஒரு சாதாரண கொலை நிகழ்ந்தால் உண்டாகும் ஆச்சரியம் அங்கே நிகழவில்லை. 

“ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்று இயேசு சொல்வதாக நாம் யோவான் 10:18ல் வாசிக்கிறோம். 

இயேசு கிறிஸ்து மரிப்பதற்காகவே பிறந்தார் என்பதை வேதவசனங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். தேவதூதர்களும் அவரை “இரட்சகர்” என்றே அறிமுகம் செய்தனர். “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” என்று வெளிப்படுத்தல் 13:8 வர்ணிக்கிறது. 

இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தைக் குறித்து பேதுரு இன்னும் தெளிவாக எழுதுகிறார். 

“உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்” (1 பேதுரு 1:18-20).

மனுவர்க்கத்தை சிருஷ்டிக்கும் முன்பாகவே கடவுள் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துவிட்டதைப் போன்று இது காணப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தமே அந்த காப்பீடு. அந்த காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அந்த சம்பவம் நடப்பதற்கு முன்பதாகவே (எல்லா காப்பீடுகளையும் போலவே) அது எடுக்கப்பட்டது. எனவே தான் அது எல்லாவற்றையும் உள்ளடக்குகிறது. இயேசு கிறிஸ்துவின் மரணம், மனிதன் பாவத்தில் விழுந்த பின்னர் கடவுள் சட்டென எடுத்த ஒரு முடிவு கிடையாது. இது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. 

இயேசு கொலை செய்யப்பட்டாரா? இல்லை. அவர் மனமுவந்து தம்மையே நமக்காக ஒப்புக்கொடுத்தார்.

மேற்கோள்

“சிலுவையை நோக்கிய பயணம் எரிகோ நகரிலிருந்து துவங்கவில்லை. அது கலிலேயாவிலிருந்தும் துவங்கவில்லை. அது நாசரேத்திலிருந்தும் ஆரம்பிக்கவில்லை. அதற்கும் நெடு காலத்து முன்னதாகவே அந்தப் பயணம் துவங்கியது. ஏதேன் தோட்டத்தில் மனிதனும் மனுஷியும் கனியை பறித்து கடிக்கும் ஓசையின் எதிரொலி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இயேசு கல்வாரிக்கு புறப்பட்டு விட்டார்” – மேக்ஸ் லுகடோ.

ஜெபம்: 

ஆண்டவரே, நீர் என்னை மிகவும் நேசித்ததினால் கல்வாரிக்கு சென்றீர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய சுயம் முற்றிலும் மரித்து, நான் உமக்காகவே வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.

Day 2

About this Plan

இயேசு கிறிஸ்துவின் கொலை ஏன் நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது?

இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டாரா? ஒரு சதித்திட்டத்தினால் அவர் பாதிக்கப்பட்டவரா? இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு யார் காரணம்? இயேசு கிறிஸ்துவின் மரணம் எப்படி நல்ல வெள்ளி என்று அழைக்கப்பட முடியும்? அது நல்லது என்றால், நாம் துக்கப்பட வேண்டுமா அல்லது கொண்டாட வேண்டுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு இந்த 7 நாட்கள் தியானத்திட்டத்தில் விடைகளைக் காணலாம்.

More