அன்பானவர்களே, பல போலி இறைவாக்கினர்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றபடியால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்து வந்தனவா என்று அவைகளைச் சோதித்துப் பாருங்கள். இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: மனித உடலில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொரு ஆவியும், இறைவனிடமிருந்து வந்திருக்கிறது.