1
1 யோவான் 5:14
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
நாம் அவருடைய விருப்பத்திற்கு இணங்க அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாடுதலைக் கேட்கின்றார் என்பதே இறைவனுக்கு முன்பாக நமக்குள்ள மனவுறுதியாய் இருக்கின்றது.
Compare
Explore 1 யோவான் 5:14
2
1 யோவான் 5:15
நாம் எதைக் கேட்டாலும் அவர் காதுகொடுத்து கேட்கின்றார் என்பதை நாம் அறிந்திருந்தால், நாம் கேட்டதை பெற்றுக்கொள்கின்றோம் என்றும் அறிந்திருக்கிறோம்.
Explore 1 யோவான் 5:15
3
1 யோவான் 5:3-4
இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அவரிடத்தில் அன்பாயிருப்பதாகும், அவருடைய கட்டளைகள் சுமையானவை அல்ல. இறைவனால் பிறந்த அனைவரும் உலகத்தை வெற்றிகொள்வார்கள். நமது விசுவாசமே உலகத்தை வெற்றிகொள்ளும்.
Explore 1 யோவான் 5:3-4
4
1 யோவான் 5:12
இறைவனுடைய மகனைக் கொண்டிருப்பவர்கள் வாழ்வு பெற்றவர்கள். இறைவனுடைய மகனைக் கொண்டிராதவர்கள் வாழ்வு இல்லாதவர்கள்.
Explore 1 யோவான் 5:12
5
1 யோவான் 5:13
இறைவனுடைய மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கின்றவர்களே! நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கின்றீர்கள் என்று அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
Explore 1 யோவான் 5:13
6
1 யோவான் 5:18
இறைவனால் பிறந்த யாரும் பாவத்தில் நிலைத்திருப்பதில்லை என்று நாம் அறிவோம். ஏனெனில் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர், அவர்களை காக்கிறார். தீயவனால் அவர்களைத் தொட முடியாது.
Explore 1 யோவான் 5:18
Home
Bible
Plans
Videos