1
1 யோவான் 3:18
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அன்பான பிள்ளைகளே, வெறும் வார்த்தையினாலும் பேச்சினாலும் மட்டுமல்லாமல், நமது செயலினாலும் உண்மையினாலும் அன்பு காட்டுவோமாக.
Compare
Explore 1 யோவான் 3:18
2
1 யோவான் 3:16
அன்பு என்ன என்பதை, இயேசு கிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததனால் நாம் அறிந்திருக்கிறோம். நாமும் நமது சகோதர உறவுகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
Explore 1 யோவான் 3:16
3
1 யோவான் 3:1
நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுவதற்காக, பிதா நம்மீது வைத்த பேரன்பு எவ்வளவு பெரியது என்று பாருங்கள். அப்படியே நாம் அவரின் பிள்ளைகளாயிருக்கிறோம். உலகம் அவரை அறியாதிருப்பதால் நம்மையும் அறியாதிருக்கிறது.
Explore 1 யோவான் 3:1
4
1 யோவான் 3:8
ஆனால் பாவம் செய்கின்றவனோ, பிசாசுக்குரியவனாக இருக்கின்றான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்கின்றான். பிசாசின் செய்கைகளை அழிக்கவே இறைவனின் மகன் தோன்றினார்.
Explore 1 யோவான் 3:8
5
1 யோவான் 3:9
இறைவனால் பிறந்த எவனும், தொடர்ச்சியாக பாவம் செய்ய மாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து அவனுக்குள் இருக்கின்றது. அவன் இறைவனால் பிறந்திருப்பதனால் தொடர்ச்சியாக பாவம் செய்ய முடியாது.
Explore 1 யோவான் 3:9
6
1 யோவான் 3:17
வசதி படைத்த ஒருவன், தனது சகோதர உறவுகள் தேவையோடு இருப்பதைக் கண்டும், அவன் தனது இருதயத்தை அவர்களுக்காக திறக்காது போனால், இறைவனின் அன்பு அவனில் நிலைகொள்வது எப்படி?
Explore 1 யோவான் 3:17
7
1 யோவான் 3:24
இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் அவரில் நிலைத்திருக்கிறார்கள். அவரும் அவர்களில் நிலைத்திருக்கிறார். இவ்விதமாக இறைவன் நமக்குள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்குத் தந்த பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அறிந்திருக்கிறோம்.
Explore 1 யோவான் 3:24
8
1 யோவான் 3:10
இவ்விதமாக, இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் அறிந்துகொள்கின்றோம். நீதியைச் செய்யாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல; தமது சகோதரனில் அன்பு செலுத்தாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல.
Explore 1 யோவான் 3:10
9
1 யோவான் 3:11
நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கின்றது.
Explore 1 யோவான் 3:11
10
1 யோவான் 3:13
எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக் குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள்.
Explore 1 யோவான் 3:13
Home
Bible
Plans
Videos