BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

40 günden 9. gün

இன்றைய பத்திகள் இயேசுவின் ஊழியம் பற்றிய ஆச்சரியமூட்டும் வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அவர் உண்மையில் மேசியா (கிறிஸ்து) என்று இயேசு கூறுகிறார், ஆனால் பின்னர் அவர் எந்த ராஜாவும் முன்பு செய்த விதத்தில் இஸ்ரவேல் மீது தனது ஆட்சியை உறுதிப்படுத்த மாட்டார் என்று கூறுகிறார். ஏசாயா 53-இன் படி துன்பப்படும் ஊழியக்காரராக மாறுவதன் மூலம் அவர் ஆட்சி செய்வார். அவர் தனது சிங்காசனத்தில் ஏற மரிப்பார். லூக்கா இந்தத் தலைகீழான யோசனையை அடுத்த சம்பவங்களில் ஆராய்கிறார்.

இந்தக் கதையில், இயேசு தம்முடைய சீஷர்களில் சிலரை ஒரு மலையின் மேல் அழைத்துச் செல்கிறார், அங்கு தேவனுடைய மகிமையான பிரசன்னம் ஒரு பிரகாசமான மேகமாகத் தோன்றுகிறது, இயேசு திடீரென்று மறுரூபாமாகிறார் . மற்ற இரண்டு நபர்கள் தோன்றுகிறார்கள், மோசே மற்றும் எலியா, இரண்டு பழைய தீர்க்கதரிசிகள், அவர்கள் ஒரு மலையில் தேவனின் மகிமையைக் கண்டார்கள். தேவன் மேகத்திலிருந்து பேசுகிறார், "இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள் ." இது ஒரு அற்புதமான காட்சி! இயேசுவின் புறப்பாடு அல்லது "வெளியேறுதல்" பற்றி இயேசுவும் எலியாவும் மோசேயும் பேசுகிறார்கள் என்று லூக்கா சொல்கிறார். எருசலேமில் இயேசு என்ன செய்யப் போகிறார் என்பதை எகிப்திலிருந்து இஸ்ரவேல் உடைய வெளியேற்றத்துடன் இணைப்பதற்கான ஒரு வழியாக லூக்கா யாத்திரை (கிரேக்கர்கள் மரணத்தை விவரிக்க பயன்படுத்திய ஒரு சொல்) என்ற கிரேக்க சொல்லைப் பயன்படுத்துகிறார். இதில், இயேசு கடைசி தீர்க்கதரிசி என்பதை லூக்கா நமக்குக் காட்டுகிறார். அவர் ஒரு புதிய மோசே ஆவார், அவர் தனது வெளியேற்றத்தின் மூலம் (மரணம்), இஸ்ரவேலை அதன் அனைத்து வடிவங்களிலும் பாவத்தின் மற்றும் தீமைகளின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிப்பார்.

அந்த ஆச்சரியமான வெளிப்படுத்தல் மூலம், கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் முடிவடைகிறது, லூக்கா தலைநகரத்திற்கான நீண்ட பயணத்தின் இயேசுவின் சரித்திரத்தைத் தொடங்குகிறார், அங்கு அவர் இஸ்ரவேலின் உண்மையான ராஜாவாக முடிசூட்டப்படுவதற்காக மரிப்பார்.

Gün 8Gün 10

Okuma Planı Hakkında

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More