BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

மதத் தலைவர்களின் பாசாங்குத்தனத்தைத் தவிர்க்க இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கற்பிக்கிறார். அவர்கள் தேவனின் அன்பைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் ஏழைகளைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய அறிவு இருக்கிறது, ஆனால் அதைப் புகழ் பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த இரு முகம் கொண்ட வாழ்க்கை முறையை இயேசு பொறுத்துக்கொள்ள மாட்டார், தேவன் எல்லாவற்றையும் பார்க்கிறார் என்றும் மனிதகுலத்தைப் பொறுப்பேற்க வைப்பார் என்றும் கற்பிக்கிறார். இது ஒரு எச்சரிக்கை மற்றும் ஊக்கமளிப்பு ஆகிய இரண்டையும் குறிக்கிறது. பேராசை மற்றும் வதந்திகள் இரகசியமாக இருக்காது என்பதால் இது ஒரு எச்சரிக்கை. பாசாங்கானவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். சத்தியம் வெளிப்படும், தவறு ஒரு நாள் சரி செய்யப்படும். ஆனால் இது ஒரு ஊக்கமளிப்பும் ஆகும், ஏனென்றால் தேவன் மனிதர்களில் தீமையானதை மட்டும் பார்க்கவில்லை; அவர் நல்லதையும் பார்க்கிறார். அவர் மனிதர்களின் தேவைகளைப் பார்க்கிறார், மேலும் தனது படைப்பின் மீது தாராளமாக அக்கறை கொள்கிறார். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பின்தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்போது, அவர்கள் நித்திய பொக்கிஷங்களையும், பூமியில் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் பெறுவார்கள் என்று இயேசு உறுதியளிக்கிறார். இப்போது, நிச்சயமாக, வாழ்க்கை எளிதாக இருக்கும் என்பது இதன் அர்த்தமல்ல. உண்மையில், தம்மைப் பின்பற்றுபவர்கள் உண்மையிலேயே துன்பப்படுவார்கள் என்பதை இயேசு ஒப்புக்கொள்கிறார். ஆனால் துன்பத்தை எதிர்கொள்பவர்கள் தேவனை எதிர்கொள்வார்கள் என்றும், அவருடைய நாமத்தை துதிப்பதற்காக தங்கள் உயிரைக் கொடுப்பவர்கள் தேவதூதர்கள் முன் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி அளிக்கிறார். இதன் காரணமாக, தேவனின் ஏற்பாட்டை நம்பும்படி இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஊக்குவித்து, பாசாங்குத்தனத்தின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கிறார். எல்லோரும் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்று இயேசு ஏங்குகிறார், ஆனால் பலர் அவற்றை நிராகரிக்கிறார்கள்.
Okuma Planı Hakkında

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More