BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F1280x720.jpg&w=3840&q=75)
இயேசு எருசலேமுக்குப் புறப்படுகையில், செல்லும் வழியில் ஒவ்வொரு பட்டணத்தையும் ஆயத்தம் செய்ய தம்மைப் பின்பற்றுபவர்களின் அலைகளை அனுப்புகிறார். அவை லகுவாகப் பயணிக்கிறார்கள், பொருட்கள் அல்லது பணப்பைகள் எதுவும் தேவையில்லை, மேலும் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் குணப்படுத்தும் வல்லமையையும் செய்தியையும் கொண்டுள்ளனர். இயேசுவை பின்பற்றுபவர்கள் உலகில் தேவனின் ஊழியத்தில் தீவிரமாக பங்கேற்பார்கள் என்பதை இது மீண்டும் நமக்குக் காட்டுகிறது. இயேசுவின் ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்தை கொடுக்கிறார், அதை விசுவாசிக்காதவர்கள் அதைப் பெறமாட்டார்கள், அதை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் அவர்கள் அவருடன் சேர்கிறார்கள். இது ராஜ்ய வழி. இது இந்த உலகத்தில் அதிகாரத்தையும் செல்வத்தையும் குவிப்பதைப் பற்றியது அல்ல; இது உலகை ஆசீர்வதிக்க பரலோகத்தைப் பெறுவது பற்றியது. ஆகவே, இதன் அடுத்த பகுதியில், தேவனின் ஏற்பாட்டை விசுவாசிப்பது பற்றிய இயேசுவின் பல போதனைகளை லூக்கா பதிவு செய்கிறார். ஜெபம், வளங்களை நிர்வகித்தல் மற்றும் தீவிர தாராள மனப்பான்மை ஆகியவற்றை இயேசு கற்பிக்கிறார். அவரது போதனைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஏழைகளும் பாதிக்கப்பட்டவர்களும் கொண்டாடுகிறார்கள். ஆனால், மதத் தலைவர்கள் தங்கள் பேராசை நிறைந்த வாழ்க்கை முறையை இயேசு திருத்துவதைக் கேட்டு ஆத்திரமடைகிறார்கள், அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்யத் தொடங்குகிறார்கள்.
Okuma Planı Hakkında
![BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24541%2F1280x720.jpg&w=3840&q=75)
லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More