வருகையின் ஆராதனைமாதிரி

Advent Adoration by Vertical Worship

4 ல் 3 நாள்

சமாதானம். 

“சமாதானம்” என்பதற்கான எபிரேய வார்த்தை “ஷாலோம்” என்பதாகும். இது “பாதுகாப்பாயிருப்பது, ஆரோக்கியமாயிருப்பது, பூரணமாயிருப்பது, முழுமையாயிருப்பது, ஒன்றிலும் குறைவில்லாமலிருப்பது” என்ற அர்த்தம் கொள்வதாயிருக்கிறது. ஷாலோம் உள்ளேயும், புறம்பேயும், சுகவாழ்வு பெற்று, ஒத்திசைவோடிருப்பதைக் குறிக்கிறது. மேலும் இது மனக்கவலை அல்லது மனஅழுத்தம் இல்லாமலிருப்பதையும் குறிக்கிறது. வேதாகமத்தின்படி பார்த்தால், இது வருங்காலம் சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தை. 

“சமாதான” பிரபுவின் பிறப்பு சமாதானமாக இருக்கும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைப்பார்கள். 

நினைப்பார்கள். 

மத்தேயு 1:18-25 

இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 

இயேசுவின் உலகப்பிரகாரமான தகப்பனான யோசேப்பைக் குறித்து நாம் மிகச் சிறிதளவே அறிந்திருக்கிறோம். அவன் ஒரு தச்சுத்தொழிலாளி. தன் கைகளினால் வேலைசெய்யும் கடின உழைப்புமிக்க ஒரு கைத்தொழிலாளி. அவன் அதிகம் படித்தவனல்ல, தொழிலதிபரும் அல்ல, ஆசாரியனும் அல்ல. அவன் “அன்றன்று வேலைக்கு அன்றன்று கூலி” பெற்று வாழக்கூடிய ஒரு சாதாரண மனிதன். 

அவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள் கர்ப்பவதியானபோது (அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியானதை அவன் இன்னும் அறியவில்லை), அவனுடைய செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கதாயிருக்கிறது. இந்தக்காரியம் அவனை மிக ஆழமாய் காயப்படுத்தினாலும், அவன் அவளை “அவமானப்படுத்த மனதில்லாமல்”, இரகசியமாய் தள்ளிவிட யோசனையாயிருக்கிறான். அவளுக்கு வரக்கூடிய நிந்தையினின்று அவளைக் காப்பாற்ற மனதாயிருக்கிறான். யோசேப்பு நிதானமாய் நடக்கிறவனாயிருக்கிறான், அவன் தீமையை நன்மையாய் முடியப்பண்ணுகிறான். இன்னொரு வகையில் சொன்னால், அவன் ஒரு நல்ல மனிதன். 

கதையின் இப்பகுதியில், அவன் கட்டாயமாக சமாதானமாயிருக்கவில்லை. 

மத்தேயு 1:20 முன்பகுதி

அவன் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு:

“இக்காரியங்களைக் குறித்து” யோசேப்பு இரவில் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய சொப்பனங்கள்கூட அந்த சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. தேவதூதன் ஒருவன், ஒரு வேலையுடன் அவனுடைய சொப்பனத்தில் தோன்றியபோது, அது அவனுக்கு மனஉளைச்சலைக் கொடுக்கிறது. 

மத்தேயு 1:20-23

தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்.

இயேசு பிறப்பின் கதையில் தேவதூதர்கள் மிக முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். மகிமைப் பிரகாசத்துடன் அவர்கள் வருகிறார்கள், மேலும் “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி!” கொண்டுவந்ததினிமித்தம் அவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்த செய்தி உண்மையிலேயே நல்லசெய்தியாக இருந்தபோதிலும், அதினால் அவ்வப்போது யோசேப்புக்கு ஏற்படுகிற பாதிப்புகள் அதிகமாயிருக்கின்றன. 

யோசேப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. மரியாளும், அவளுடைய புத்திரனும் மிகுந்த முக்கியத்துவமுள்ளவர்கள். தீர்க்கதரிசியினால் முன்னறிவிக்கப்பட்டவள் மரியாள்தான். இயேசு ஜனங்களை அவர்களுடைய பாவங்களினின்று மீட்டெடுப்பார். இவைகளெல்லாம் முன்பாகவே தீர்மானிக்கப்பட்ட மிக உன்னதமான காரியங்களாகும். 

ஆனால் யோசேப்பைக் குறித்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? ஆர்வத்துக்குரிய விஷயம் என்னெவென்றால், அவனுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்தோ, அல்லது அவனுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் குறித்தோ ஒன்றும் சொல்லப்படவில்லை. அவனுடைய வாழ்க்கை என்னவோ ஒரு கன்னிகை, மற்றும் அவளுடைய புத்திரன் ஆகிய இருவர்களைச் சுற்றி மட்டுமே இருக்கவேண்டும் என்பதுபோல் இருக்கிறது. 

“நீ ஒரு தியாகியாக இருக்கத் தேவையில்லை, ஜோ”, “இது ஒரு அர்த்தமற்ற சொப்பனம்” என்றுகூட அவனுடைய நண்பர்கள் சொல்லியிருக்கலாம். 

மத்தேயு 1:24-25

யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

தேவன் யோசேப்பை ஒரு காரியத்தை செய்யும்படி கட்டளையிடுகிறார், அவன் அதை செய்யும்படி முன்வருகிறான். அசௌகரியங்கள், சோதனைகள், பயங்கள், சவால்கள், மற்றும் அவமானங்கள் (சமாதானமற்ற சூழ்நிலைகள்) மத்தியில், அவன் சமாதானப் பிரபுவை வளர்க்கப்போகிறான். 

நான் யோசேப்பாக இருந்திருந்தால், அது தொடர்பாக எனக்கு நிறைய கேள்விகள் இருந்திருக்கும். ஆனால் யோசேப்பு ஒன்றுமே கேட்கவில்லை. அவன் தேவனை அப்படியே நம்பி அவருக்குக் கீழ்ப்படிகிறான். 

உண்மையில், இயேசுவின் வாழ்க்கை சரித்திரத்தின் முற்பகுதியில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாவற்றிலும், யோசேப்புதான் பரலோக தூதுவர்களை அதிகமாக சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். திரும்பத்திரும்ப, தேவதூதர்கள் கடினமான வேலைகளுடன் தோன்றுகின்றனர். திரும்பத்திரும்ப, யோசேப்பு அவர்களை நம்புகிறான், மேலும் அவர்களுக்குக் கீழ்ப்படிகிறான். நீங்களே அதைப் பாருங்கள்…

மத்தேயு 2:13-14

அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 

மத்தேயு 2:19-21

ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான் 

நம்முடைய விருப்புவெறுப்புகள், நம்முடைய சுதந்திரம், மற்றும் நம்முடைய சமாதானத்தைக் காத்துக்கொள்ள நாம் மிகக்கடினமாகப் போராடுகிறோம். நம்முடைய மாமிசபலத்தினால் நித்திய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முயற்சிக்கும் போது, மிகஅதிக மனக்கவலை, மிகஅதிக மனஅழுத்தம், மற்றும் மிகக்குறைந்த அளவிலான சமாதானமே கிடைக்கிறது. செங்கடலைப் பிரிக்கும்படியாக தேவன் நம்மிடம் கேட்கவில்லை, ஆனால் அதின் வழியாக நடக்கும்படி கேட்கிறார். தேவன் யோசேப்பை அவனுடைய திருமணம், மற்றும் குடும்பத்தைக் குறித்து உலகிற்கு விவரிக்கும்படி கேட்கவில்லை, ஆனால் அவர் யோசேப்பை தம்மை நம்பி, தமக்குக் கீழ்ப்படியும்படி கேட்கிறார். 

நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமே நாம் தேவனை அவருடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படி அனுமதிக்கும் வழிகளாகும். யோசேப்பு செய்ததுபோல் நாமும் செய்வோமானால், நமக்கு சமாதானம் உண்டாகும். 

பிலிப்பியர் 3:13-14; 4:7

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், உங்களுடைய எதிர்காலத்தை தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கும்படியாக தீர்மானம் பண்ணுங்கள், மற்றும் யோசேப்பைப் போல, சமாதான பிரபுவோடு இணைந்து உங்கள் வாழ்வைக் கட்டுங்கள். 

...

ஜெபம்:

தேவனே உம்முடைய சமாதானத்தை எனக்குத் தாரும். உம்மை நம்பி, உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவிசெய்யும்

சிந்தனைக்கு:

நித்திய மகிமையை மாமிசபலத்தினால் பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் முயற்சித்த வழிகள் என்னென்ன? 

கடினமாக இருந்தபோதிலும், தம்மை நம்பி, தமக்குக் கீழ்ப்படியும்படிக்கு தேவன் உங்களை அழைக்கும் சில பகுதிகள் என்னென்ன? 

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Advent Adoration by Vertical Worship

நம்பிக்கை, அன்பு, சமாதானம், களிப்பு. பண்டிகை காலங்களில் இவ்வார்த்தைகள் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஏன் என நமக்கு ஞாபகம் இருக்கிறது? கிறிஸ்துமஸின் கதை, கர்த்தர் வரலாற்றில் எவ்வாறு இயேசுவின் பிறப்பு மூலம் இடைபட்டார் என்பதன் கதையாகும். மரியாள், யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களின் வாழ்வுகள் இந்த நிகழ்வின் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டது. இவர்கள் நம்பிக்கை, அன்பு, சமாதானம் மற்றும் களிப்பை கண்டுகொண்டனர்; இயேசுவின் வழியாக இவற்றை எவ்வாறு நாமும் கண்டடையலாம் என்பதை நினைவுகூறலாம். 

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக வெர்டிகல் ஆராதனை மற்றும் எசென்ஷியல் ஆராதனை அமைப்பைச் சேர்ந்த ஜான் குவேரா அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, https://www.verticalofficial.com க்குச் செல்லவும்.