வருகையின் ஆராதனைமாதிரி

Advent Adoration by Vertical Worship

4 ல் 1 நாள்

எனக்கு ஒரு புது மிதிவண்டி கிடைக்கும் என நம்புகிறேன்.
என்னுடைய அணி இந்த விளையாட்டில் வெற்றிபெறும் என நம்புகிறேன்.
மக்கள் என்னை விரும்புவார்கள் என நம்புகிறேன்.
அவளுக்கு என்னைப் பிடிக்கும் என நம்புகிறேன்.
அந்த பள்ளிக்கு நான் செல்வேன் என நம்புகிறேன்.
என்னுடைய கனவு வேலையை நான் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்.
யாராவது என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என நம்புகிறேன்.
எனக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
ஒரு நாள் எனக்குக் குழந்தைகள் பிறக்கும் என நம்புகிறேன்.
நான் நல்லவன் என நம்புகிறேன்.
இந்தப் பழக்கத்தை நான் விட்டுவிடுவேன் என நம்புகிறேன்.
என்னுடைய வீடு அசுத்தமாயிருப்பதைக் குறித்து அவர்கள் ஒன்றும் நினைக்கமாட்டார்கள் என நம்புகிறேன். 

இவ்விதமாய் நினைப்பதை நான் நிறுத்தி விடுவேன் என நம்புகிறேன்.
ஒன்றும் பிரயோஜனமில்லாமல் போகாது என நம்புகிறேன்.
என் வாழ்க்கை ஏமாற்றமளிப்பதாய் இருக்காது என நம்புகிறேன்.
நான் நம்புகிறேன்...
நான் நம்புகிறேன்...
நான் நம்புகிறேன்... 

நம்முடைய வாழ்க்கையே நம்முடைய நம்பிக்கைகளினால்தான் வரையப்படுகிறது. 

நீதிமொழிகள் 13:12:
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.” 

நம்முடைய வாழ்க்கை முழுவதுமே நாம், இருதயத்தின் இளைப்பு மற்றும் விருப்பம் நிறைவேறுதல் ஆகிய இவைகளுக்கிடையேதான் போராடிக்கொண்டிருக்கிறோம், இல்லையா? 

சிறுவர்களாயிருக்கும்போது, நாம் எதையாவது அடைய விரும்பினால், அது இந்த இரு வழிகளில் ஒன்றில்தான் செல்லும் என்று அறிந்து வைத்திருக்கிறோம். இருதயத்தின் சோர்வைத் தவிர்க்கவும், விரும்பினதைத் தக்கவைத்துக்கொள்ளவும் நம்மால் இயன்ற எல்லாவற்றையும் நாம் செய்கிறோம். 

இதைச் சிந்தித்துப்பாருங்கள்: ஒரு முறை மக்கள் நம்பிக்கையற்று இருந்தபோது, ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு தேவன் இவ்விதமாகப் பேசினார். 

ஏசாயா 9:6:
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்.” 

கேட்பதற்கு இது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதற்காக700 ஆண்டுகாலம் காத்திருக்கவேண்டியிருந்தது

லூக்கா 2:12:
“...பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்” 

ஏசாயா தீர்க்கதரிசனத்திற்கும், இயேசுவின் பிறப்பிற்கும் இடையே 700 வருடங்கள் சென்றன, ஆபிரகாமிற்கும் இயேசு பிறப்பிற்கும் இடையே ஏரத்தாள 2,000 வருடங்கள் சென்றன என்பதை சொல்லத் தேவையில்லை. 

தேவன் வாக்குத்தத்தம் செய்கிறார், ஆனால் அது நிறைவேற காலவரையறையைக் கொடுக்கவில்லை. கேள்விப்பட்டது போல் தோன்றுகிறதா? 

பெரும்பான்மையான நம்முடைய கவலைகள் நம்முடைய பொறுமையின்மையாலேயே வருகின்றன. “இன்னும் நடக்கவில்லை” என்பதை நாம் “ஒருபோதும் நடக்காது” எனத் தவறாக எடுத்துக்கொள்கிறோம். (இருதயத்தின் இளைப்பு!) 

1 பேதுரு 1:13:
“...இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.” 

தேவன்மேல் நம்பிக்கையாயிருப்பதென்பது தேவனிடம் பொறுமையாயிருப்பதாகும். சொல்லப்பட்டக் காரியங்களெல்லாம் இனிமேல்தான் நிறைவேறும் என்பதை நம்புவதாகும். கதை இன்னும் முடிந்துவிடவில்லை, எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதை நம்புவதாகும். சில காரியங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை அல்லது தெரியப்படுத்தப்படவில்லை என்பதை நம்புவதாகும். காலதாமதமானாலும், நமக்கு ஒரு பாலகன் பிறப்பார், அவர் “மெய்தேவனின் மெய்யான தேவனும், நித்திய வெளிச்சத்தின் வெளிச்சமுமாயிருப்பார்”, என்பதை நம்புவதாகும். 

நம்பிக்கையை கிறிஸ்துவின்மேல் வைக்கும்போது — இருதயத்தின் வாஞ்சை நிறைவேறும். 

வெளிப்படுத்தல் 22:2:
“நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள்.” 

நம்முடைய வாழ்க்கை நம்முடைய நம்பிக்கைகளால் வரையப்பட்டுள்ளது. அந்த வரைபடம் நீளமானது, ஆனால் அது எங்கேயோ வழிநடத்துகிறது. 

வெளிப்படுத்தின விசேஷத்தில், யோவான் கண்ட தரிசனத்தின்படி, அது நம்மை ஜீவவிருட்சத்தின் அண்டை வழிநடத்துகிறதாயிருக்கிறது. மேல்கூறப்பட்ட நீதிமொழி சொல்வதைப்போல், நம்முடைய வாஞ்சை நிறைவேறும். இந்த நம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றாது. 

இந்தப் பாலகனை நோக்கிப் பார்ப்பதினால், தேவன் உங்களுக்கு அருளும் நன்மைகளை நோக்கிப்பார்க்கும் விடுமுறை காலம் வந்துவிட்டது. நீங்கள் என்னப் பார்க்கிறீர்கள்? தொட்டிலில் இருக்கும் வெறும் குழந்தையையா? அல்லது உண்மையான ஜீவவிருட்சத்தை நமக்குச் சுட்டிக்காட்டும் ஜீவனைத் தன்னுளடக்கிய மரத்தினாலான ஒரு மாட்டுக்கொட்டிலையா? 

இதுவே நம்பிக்கை. 

நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என நான் நம்புகிறேன். 

...

ஜெபம்: 

கிறிஸ்துவே நீர் என் நம்பிக்கையாயிரும். உம்மைப் பார்க்க எனக்கு உதவிசெய்யும். உம்மை நோக்கிப் பார்க்க எனக்கு உதவிசெய்யும். 

செய்முறை:
உங்கள் வாழ்க்கையைக் குறித்ததான ஒரு வரைபடத்தை உருவாக்குங்கள். நீங்கள் முதன்முதலாகக் கொண்டிருந்த நம்பிக்கையிலிருந்து அது ஆரம்பிக்கட்டும். உங்களின் உணர்வுகளை நினைவிற்குக் கொண்டுவரும் விதத்தில் எழுதுங்கள், ஆனால் அதில் மூழ்கிவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை வரைபடத்தை நீங்கள் வரைந்து முடித்த பின், இதை எழுதுங்கள்:    என்னுடைய வாஞ்சை கிறிஸ்துவுக்குள் நிறைவேறும் என நான் நம்புகிறேன்.
தேவன் இந்த வாக்குத்தத்தத்தை ஏற்கனவே நிறைவேற்றினதற்காக அவருக்கு நன்றிசெலுத்துங்கள். 

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Advent Adoration by Vertical Worship

நம்பிக்கை, அன்பு, சமாதானம், களிப்பு. பண்டிகை காலங்களில் இவ்வார்த்தைகள் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் ஏன் என நமக்கு ஞாபகம் இருக்கிறது? கிறிஸ்துமஸின் கதை, கர்த்தர் வரலாற்றில் எவ்வாறு இயேசுவின் பிறப்பு மூலம் இடைபட்டார் என்பதன் கதையாகும். மரியாள், யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களின் வாழ்வுகள் இந்த நிகழ்வின் மூலம் முற்றிலும் மாற்றப்பட்டது. இவர்கள் நம்பிக்கை, அன்பு, சமாதானம் மற்றும் களிப்பை கண்டுகொண்டனர்; இயேசுவின் வழியாக இவற்றை எவ்வாறு நாமும் கண்டடையலாம் என்பதை நினைவுகூறலாம். 

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக வெர்டிகல் ஆராதனை மற்றும் எசென்ஷியல் ஆராதனை அமைப்பைச் சேர்ந்த ஜான் குவேரா அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, https://www.verticalofficial.com க்குச் செல்லவும்.