மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி

Journey To The Manger

70 ல் 5 நாள்

அவதாரம்

சிஸ்டைன் சிறு கோயிலின் உச்சவரம்பில் மைக்கேலேஞ்சலோவின் தலைசிறந்த படைப்பின் மிகவும் பிரபலமான பகுதி ஆதாம் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆதாம் ஒரு பாறையில் சாய்ந்துகொள்கிறார், அதே நேரத்தில் தேவன், மேகங்களில் விரைந்து, முதல் மனிதனை நோக்கி தனது படைப்பு விரலை நீட்டுகிறார். ஆதாம் தேவனை நோக்கிச் செல்கிறான், அவர்கள் நீட்டிய விரல்கள் கிட்டத்தட்ட சந்திக்கின்றன - ஆனால் அவை தொடவில்லை.

அவதாரத்தின் அழகோடு இந்த உருவத்தை வேறுபடுத்துங்கள்: தேவன் தம்முடைய படைப்புக்கு நெருக்கமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம்மில் ஒருவராகவும், முழு மனிதனாகவும், முழு தெய்வீகமாகவும் வாழும்படி மாம்சமாக மாறுகிறார். “அவதாரம்” என்ற சொல் முறையான இறையியல் வார்த்தையாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மையில் நம்பமுடியாத நெருக்கத்தை குறிக்கும் ஒரு சொல்.

இயேசு ஒரு குழந்தையாகவும், பின்னர் சிறு பிள்ளையாகவும், பின்னர் இளம்பருவமாகவும், பின்னர் வளர்ந்த மனிதராகவும் ஆனார் - இதனால் அவர் எல்லா வகையிலும் நம்முடன் நெருக்கமாக தொடர்பு கொள்ள முடியும். அவருடன் ஒப்பிடக்கூடிய எந்த தியாகமும் இல்லை.

செயல்பாடு: இயற்கையோடு தனியாக சிறிது நேரம் செலவிடுங்கள். இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களுடன் தொடர்பு கொள்ள அவருக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Journey To The Manger

2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/yv18