மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி
இயேசு சுதந்தரவாளி
பழைய ஏற்பாடு, மனிதகுலத்தை அடிமைத்தனத்திலிருந்தும் சிறையிலிருந்து விடுவிக்கும் ஒரு தெய்வீக மீட்பரை முன்னறிவிக்கிறது. இந்த வரவிருக்கும் மீட்பானது ஒரு சுதந்தரவாளியின் பங்கு, ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர், உறவினரின் கடன்களை செலுத்துவதன் மூலம் மீட்பை தேர்வு செய்வது போன்றது.
இந்த அடையாளத்தின் நிறைவேற்றமாக, இயேசு நம்முடைய மீட்பின் சுதந்தரவாளி ஆனார். அவர் நம்முடைய மனிதகுலத்தில் பங்கெடுப்பதற்காக அவர் மாம்சமாகவும் இரத்தமாகவும் ஆனார், மனுஷகுமாரனாகவும், தேவனுடைய குமாரனாகவும் ஆனார். அவர் நம்முடன் நடந்து, நம்முடைய அடையாளம் கண்டு, இதனால் நம் பாவ கடன்களைச் செலுத்துவதோடு, நம்மை உருவாக்கினவரிடத்தில் நாம் திரும்பும் வழியையும் காட்டினார். வேறு எவரும் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்க முடியாது.
செயல்பாடு: சில நல்ல பலகாரங்களை சுட்டு, உங்கள் அயலவர்களையோ அல்லது சக ஊழியர்களையோ சந்தோஷப்படுத்துங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்
More