மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி

அவரது உயர்ந்த நோக்கம்
பெரும்பாலும் பெரும் ஏமாற்றத்தின் காலங்களில், நம்முடைய வாழ்க்கைக்கான அவருடைய உயர்ந்த நோக்கத்தைக் கண்டறிய தேவன் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறார்.
யோசேப்புடன் மரியாள் நிச்சயதார்த்தம் செய்த சிறிது நேரத்திற்குப் பிறகு, நினைத்துப்பார்க்க முடியாத செய்திகளைத் தாங்கி அவரிடம் வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள் - அது ஒரு பெரிய அதிசயத்தின் விளைவு என்று அவள் கூறினாள். யோசேப்பின் இருதயம் நொறுங்கியிருக்க வேண்டும். நல்ல வழிகள் எதுவும் இல்லை - ஒரு அநீதியான பெண்ணை மணந்து, பழியை சகித்துக்கொள்ளவேண்டும் அல்லது அவர் மதிக்கும் மற்றும் பராமரிக்கும் இந்த பெண்ணை பகிரங்கமாக அவமானப்படுத்தவேண்டும். இந்த வினோதமான நிகழ்வுகளுடன் தேவனுக்கு எவ்வாறு தொடர்பு இருக்க முடியும்?
அன்றிரவு யோசேப்பு தூங்க முயன்றபோது, ஒரு தேவதூதர் கனவில் வந்து மரியாளை நம்பும்படி அவரிடம் சொன்னார் தேவனுடைய மகனின் பூமிக்குரிய பெற்றோராக இருக்க வேண்டும் என்ற இந்த தனித்துவமான அழைப்பில் அவருடன் முழு மனதுடன் பங்குதாராக இருக்கும் படியாக கூறினார். யோசேப்பு அவநம்பிக்கை அல்லது கசப்புடன் பதிலளித்திருக்கலாம். ஆயினும், தேவன் யோசேப்பின் விசுவாசத்தின் மூலம், மனிதகுலத்தை நித்திய காலத்திற்கு ஆசீர்வதிக்கும் ஒப்பற்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.
செயல்பாடு: உங்கள் வாழ்க்கையில் ஒரு குழந்தைக்கு பிடித்த கதைப்புத்தகத்தைப் படிக்க உங்கள் நாளிலிருந்து ஒரு நேரத்தை ஒதுக்குங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சிலுவையும் கிரீடமும்

வருகை: கிறிஸ்துமஸ் பயணம்

நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்

இயேசு: நம் ஜெயக்கொடி

ஏன் ஈஸ்டர்?

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

இளைப்பாறுதலைக் காணுதல்
