மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி
தேவனின் மீட்பு திட்டம்
இயேசு பூமிக்கு வந்தபோது, அவருடைய சொந்த மக்கள் அவரை அடையாளம் காணவில்லை. யூதர்கள் தங்கள் தீர்க்கதரிசிகளின் சாட்சியங்கள் மற்றும் தேவனின் தொடர்ச்சியான விசுவாசத்தின் நீண்ட வரலாறு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியாவை இன்னும் அங்கீகரிக்கவில்லை. ரோமானிய ஆட்சியின் புறமத வழிபாட்டையும் அடிமைத்தனத்தையும் அழித்து, தங்கள் அரசியல் ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற அவர் வருவார் என்று அவர்கள் கூறினர். அவர் தேவனுடைய ராஜ்யத்தைப் பெறுவார். அவர்களின் மனதில், இஸ்ரவேலின் பன்னிரண்டு பழங்குடியினரை முக்கியத்துவம் மற்றும் அதிகாரத்திற்கு மீண்டும் நிறுவுவ போகிறார் என்று எண்ணினார்கள்.
ஆனால் வெறுக்கத்தக்க புறஜாதியினரை விரட்டியடிப்பதன் மூலம் இயேசு சாதனை படைக்க வரவிலலை. அவர் இந்த பூமியல்லாத ஒரு ராஜ்யத்தை அறிமுகப்படுத்த வந்தார்- தேவனின் சத்தியத்தையும் சமூகத்தையும் உடைந்த இந்த உலகத்திற்கு கொண்டு வர வந்தார்.
தேவனின் மீட்பின் திட்டத்தின் உண்மையை, நம்முடைய பெருமை மறைக்கும்போது, அவர்களின் ராஜாவின் வருகையைத் தவறவிட்டவர்களிடமிருந்து நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம்? அவருடைய ராஜ்யத்தின் உண்மையான வருகையைக் காண ஆன்மீகக் கண்கள் திறந்த சிலரைப் போல நாம் இருப்போம்.
செயல்பாடு: ராஜ்யம் வரும்படி ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். அந்நியரின் குறிப்பிட்ட தேவைகளைப் பற்றி கேட்டறிந்து அவர்களுக்காக ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்
More