மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி

Journey To The Manger

70 ல் 19 நாள்

தேவனுடைய இருதயம் வெளிப்படுத்தப்பட்டது

கிறிஸ்து ஏன் பூமிக்கு வந்தார் என்பதை விளக்கும் அனைத்து இறையியல் காரணங்களையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவன் உங்களிடம் வைத்திருக்கும் அன்பைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். அவர் உங்களை மிகவும் நேசித்தார், உங்களுடன் நடக்கும் இம்மானுவேல் ஆகும்படி அவர் தனது மகிமையையும் கனத்தையும் ஒதுக்கி வைத்தார். ஆரம்பத்தில் இருந்தே-ஏதேன் தோட்டம் முதல் உங்கள் சொந்த வாழ்க்கையில் அவர் செய்த பணிகள் அனைத்தும் அன்பினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்பதைக் கவனியுங்கள்.

அவர் வருவதற்கு வெகு காலமாக ஜெபித்த ஒரு எழை தேவாலய விதவைக்கு தோன்றுவதற்கு அன்பினால் அவர் தூண்டப்பட்டார். அன்பினால், பல நபர்களை சந்தித்து ஊழியம் செய்து குணமாக்க தேவன் தமது கால அட்டவணையை மறுசீரமைத்தார். அன்பினால் தான் அவர் மகா பாவிகளுடனும், வரி வசூலிப்பவர்களுடனும் உணவருந்தினார். சமூகம் யாரை ஒதுக்கி வைத்தாலும், அவர் தனது கரங்களில் கூட்டினார். அவரது வாழ்க்கை செயலில் அன்பு இருந்தது.

தேவனின் உண்மையான இருதயத்தை இயேசு நமக்குக் காட்டினார், நம்மிடையே வாழ்ந்து, அவருடன் உண்மையான, ஆழமான நட்பிற்கு நம்மை அழைத்தார். அவர் ஆட்சி செய்வதற்கும் அழிப்பதற்கும் அல்ல, ஆனால் தன்னிடம் வரும் அனைவருக்கும் புதிய வாழ்க்கையை வழங்குவதற்கும் காப்பாற்றுவதற்கும் வந்தார்.

செயல்பாடு: சிறிது காலம் நீங்கள் பேசாத நண்பரை அழைத்து மீண்டும் இணைத்து சிறிது நேரம் செலவிடவும்.

வேதவசனங்கள்

நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

Journey To The Manger

2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/yv18