மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி
தேவனிடம் உள்ள ஆதி ஐக்கியம்
ஏதேன் தோட்டத்திற்கு முன்பே தேவனின் அன்பின் ஊழியம் தொடங்கியது. உலகத்தின் அஸ்திவாரத்திற்கு முன்பும், கால வளர்ச்சியிலும், மனிதனுடனான அவரது அசல் உறவை மீட்டெடுடக்கும்: ஒரு இலக்கை நோக்கி அவர் படிப்படியாக நகர்ந்தார்.
தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, ஆதாம் மற்றும் ஏவாளுக்கு விலங்குகளின் தோல்களிலிருந்து செய்யப்பட்ட உறைகள் வழங்கப்பட்டன. தேவனின் இந்த செயல் மனிதனின் அவமானத்தை மறைக்க இந்த விலங்குகளின் உயிரைத் தியாகம் செய்வது கிறிஸ்துவின் எதிர்கால தியாகத்தின் முன்னறிவிப்பாகும், இது நமக்கு உண்மையான மற்றும் முழுமையான இரட்சிப்பை அளித்தது.
அன்பின் நோக்கில் இயேசு பூமிக்கு வந்தார். அவருடைய மகத்தான தியாகத்தின் மூலம், நம்முடைய படைப்பாளருடனான ஐக்கியத்திற்கான அசல் இடத்திற்கு நாம் மீட்டெடுக்கப்படுகிறோம்.
செயல்பாடு: தேவாலயத்தில் வீட்டிலிருப்பது போல் உணராத ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? உங்களுடன் அடுத்த ஆராதனையில் கலந்து கொள்ள அவர்களை அழைக்கவும், அதனால் அவர்கள் தனியாக உணர மாட்டார்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்
More