மாட்டுத்தொழுவத்திற்கான பயணம்மாதிரி
இம்மானுவேல்
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிகளுக்கு தங்கள் வார்த்தைகள் எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை; தேவனுடைய ஆவியானவர் அவர்களுக்குக் காட்டியதை அவர்கள் வெறுமனே பதிவு செய்தார்கள். ஆகவே, ஏசாயா எழுதியபோது, “ இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத் 1:23;.ஏசா. 7:14), ஏசாயாவிற்கு எப்போது நடக்கும் என்று தெரியாது.
இம்மானுவேல் என்றால் “தேவன் நம்மோடு இருக்கிறார்”. ஏதேன் தோட்டத்தில் இழந்த மனிதனை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முதல் படியாக இயேசு பூமியில் இருந்தார். அவரது வாழ்க்கை தேவன் நம்மோடு இருக்கிறார் தனிப்பட்ட வெளிப்பாடாக இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா மூலம் கர்த்தர் உலகிற்கு அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்திற்குள் வாழமுடிந்த ஒப்பற்ற ஆசீர்வாதத்தில் இன்று நாம் மகிழ்ச்சியடையலாம்.
செயல்பாடு: அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும்: உங்களுக்கு பிடித்த கிறிஸ்துமஸ் திரைப்படத்தைப் பார்த்து, தேவனின் இயல்பு பற்றி புதிதாக ஒன்றை வெளிப்படுத்த பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைதியான இரவில், தேவதூதர்கள் தங்கள் மந்தைகளை மேய்க்கும் மேய்ப்பர்கள் கூட்டத்திற்கு இரட்சகரின் பிறப்பு செய்தியைக் கொண்டு வந்தனர். செய்தியைக் கேட்டபின், அந்த மேய்ப்பர்கள் பெத்லகேமில் ஒரு மாட்டுக்கொட்டையில் ஒரு குழந்தையைத் தேடுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த அழைப்பு மாறவில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லியுடன் இணையுங்கள், அவர் இரட்சகரை நெருங்க உங்களுக்கு உதவுவதோடு, இந்த காலத்தில் தகப்பனின் அன்பில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க ஊக்குவிக்கிறார்
More