ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்மாதிரி

Six Days Of The Names Of God

6 ல் 4 நாள்

DAY 4: நாள் 4: எஷ் ஓக்லா - பட்சிக்கும் தீ

காட்டுத் தீயால் ஏற்பட்ட அழிவை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அது வேகமாகப் பரவி அதன் பாதையில் உள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் ஆறுகள் அனைத்தையும் அது பட்சித்து விடுகிறது. இப்போது பிரபஞ்சத்தை விட பெரிய எரியும் நெருப்பை கற்பனை செய்து பாருங்கள், அப்போது நீங்கள் தேவனின் சக்தியின் சிறிய கட்சியைப் பெற தொடங்குவீர்கள்.

தேவனின் அபரிமிதமான சக்தியை நாம் மதிக்க வேண்டும், ஆனால் அவர் நம்மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு தனிப்பட்ட தேவன் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, அவர் எப்பொழுதும் நம் புகழுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தேவன். நாம் அவரை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ஆனால் அவரை கூப்பிடுவதற்கும் அவருடன் உறவில் ஏற்படுவதற்கும் நாம் பயப்படக்கூடாது.

தேவனின் அளவைக் கணக்கிடுவது கடினமாக இருக்கலாம், ஆனால் நம் வாழ்வின் ஒவ்வொரு விவரத்திற்கும் அவருடைய கவனத்தை செலுத்த முடியும். இவ்வளவு வல்லமை படைத்த ஒருவர் நம் வாழ்வில் தோன்றும் அற்ப விஷயங்களில் எப்படி அக்கறை காட்ட முடியும்? ஏனென்றால், அவர் நம்மை மிகவும் ஆழமாக அக்கறை கொள்கிறார். அதனால்தான் அவருடைய பட்சிக்கும் நெருப்பு நம் இருதயங்களில் வலுவாக எரிய அனுமதிக்க வேண்டும்.

அவராகிறார் எஷ் ஓக்லா, ஒரு எரியும் நெருப்பு, ஆனால் கிருபை, பொறுமை மற்றும் இரக்கத்தால் நிரப்பப்பட்ட நெருப்பு. நம் இருதயங்களிலும், மனதிலும், ஆத்துமாவிலும் அவரை முதன்மையாக்கும் குறிக்கோளுடன் அவர் நம்மை அவரிடம் இழுக்கிறார். மேலும் நெருப்பின் நடுவே, அவர் நம் இருதயங்களில் அன்பை வளர்க்கிறார்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Six Days Of The Names Of God

தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017.

More

இந்த திட்டத்தை வழங்கியதிற்கு தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் மற்றும் டோனி எவன்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, https://tonyevans.org/