ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்மாதிரி
நாள் 1: எல் எமூனா - உண்மையுள்ள கர்த்தர்
நாம் உண்மையுள்ள மனிதர்கள் என்று நினைக்க விரும்புகிறோம். நாம் சரியான நேரத்தில் வேலைக்குச் செல்கிறோம் (சரி, வழக்கமாக) மற்றும் விடாமுயற்சியுடன் நம்முடைய வேலையைச் செய்கிறோம். நம்முடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்குகிறோம். நாம் நம்முடைய சபையில் ஈடுபடவும் குழுக்கள் மற்றும் தன்னார்வ வாய்ப்புகளுக்காக பதிவும் செய்கிறோம். ஆனால் நாம் உண்மையாக இருக்க எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும், நாம் நிறைவுபெற்றவரல்ல. தவிர்க்க முடியாமல், நாம் ஒரு கூட்டத்தைத் தவறவிடவோ அல்லது குழந்தையின் கால்பந்து விளையாட்டைத் தவிர்த்து விடவோ அல்லது அந்த தன்னார்வ வேலையை மறந்துவிடவோ செய்கிறோம்.
நாம் எப்போதும் உண்மையுள்ள மக்களாக இருக்க முடியாது என்பதால், உண்மையுள்ள தேவனுக்கு நாம் சேவை செய்கிறோம் என்பதை அறிவது மீண்டும் நம்பிக்கையூட்டுகிறது. அவருடைய பெயர் எல் எமூனா என்பது "உண்மையுள்ள கர்த்தர் " என்று பொருள்படும், மேலும் அவர் எல்லாத்தறுவாய்களிலும் வந்து நம் வாழ்க்கையில் செயல்படுவார் என்று நம்பலாம். அவருடைய வாக்குறுதிகளை எப்போதும் காப்பாற்றுகிறாரா? சோதித்துப் பாருங்கள். எப்பொழுதும் நம் பிரார்த்தனைகளைக் கேட்கிறதா? சோதித்துப் பாருங்கள். எப்பொழுதும் நம்முடன் இருக்கிறதா? சோதித்துப் பாருங்கள்
மற்றவர்களுக்கு முற்றிலும் விசுவாசமாக இருக்க விடாதபடி நம்மைத் தடுக்கும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கின்றன. நாம் மனிதர்கள் என்பதால், நமது சுய பாதுகாப்பு, சுயநலம் மற்றும் பேராசை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருக்கிறோம். உண்மையாகவே, நாம் எல்லா நேரத்திலும் சரியானவர்களாக இருக்க முடியாது. ஆனால் நாமக்கு முடியாத போது, கர்த்தர் வருகிறார். மேலும் நாம் செய்ய வேண்டிய பணிக்கு, உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கும் மற்றவர்களுக்குக்காக செல்வதற்கும் அவர் நம்மை மெதுவாக மீண்டும் வழிநடத்துகிறார். நம்முடைய அபூரண காலங்களில் நாம் அவருடைய பரிபூரணத்திற்கு திரும்பும்போது, அவருடைய உண்மைத்தன்மை நம்மை மாற்றுகிறது.
இந்த தியானக் கருத்துள்ளதாக நீங்கள் கண்டால், யெகோவா ஜிரே என்ற பெயரில் உள்ள பிரசங்கத்தைப் பதிவிறக்கம் செய்வதை ஒரு பரிசாக உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். உங்களுக்கான டோனி எவன்ஸின் முழு பிரசங்கத்தையும் இங்கே கோருக .
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017.
More