ஆறு நாட்களிள் கர்த்தரின் பெயர்கள்மாதிரி
நாள் 3: யேகோவா யீரே - கர்த்தர் பார்த்துக்கொள்வார்
இந்த மாதம் உங்கள் செலவுகளை எப்படிச் செலுத்தப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. உங்கள் உறவின் நிலை குளறுபடியாய்க் கிடக்கிறது. வேலையில் குறைவு வருவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், மேலும் நிறுவனத்தில் உங்கள் பதவி நிச்சயமற்றதாயிருக்கிறது. வாழ்க்கையின் அடிப்படையான உடல்நலம், நிதி, தங்குமிடம், உணவு, குடும்பம், வேலை என எல்லாம் ஆபத்தில் இருக்கும்போது, எங்கு போவதென்று தெரியாமல் நீங்கள் பயப்படுவது இயற்கையானது. அப்போதுதான் நீங்கள் அழைக்க வேண்டும்யேகோவா யீரே. தேவனின் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாமம் "கர்த்தர் பார்த்துக்கொள்வார்" என்று பொருள்படும், மேலும் இது சக்தி மற்றும் வல்லமையால் நிரப்பப்பட்ட நாமம்.
நம் எதிர்காலத்தைப் பற்றி பயம்நிறைந்ததாக உணரும்போது, நாம் தேவனிடத்திற்கு திரும்பி அவருடைய நாமத்தைக் கூப்பிட வேண்டியது அவசியம். ஒவ்வொரு நல்ல மற்றும் சரியான பரிசு அவரிடமிருந்து வருகிறது, மேலும் அவர் வழங்கும் தானங்களுக்கும் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அளவே இல்லை. அவர் மீது நம்பிக்கை வைப்பது மட்டுமே சில சமயங்களில் நம் அச்சங்களைத் தணித்து நேர்மறையான மனநிலையைப் பேணுவதற்கான ஒரே வழியாயிருக்கிறது.
கற்றுக்கொள்வதற்கு கடினமான பாடமாக இருக்கலாம், ஆனால் இங்கே பூமியில் உண்டாகும் சோதனைகள் நம் ஆவிக்குரிய தசைகளை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் தேவனிடம் நம்மை நெருக்கி கொண்டுவருகிறது. நமது போராட்டங்கள் மூலம், நம் நுரையீரலுக்கு சுவாசிக்க காற்றையும், நம் கண்களுக்கு வெளிச்சத்தையும் அவர் எவ்வாறு வழங்குகிறார் என்பதை அவர் நமக்கு நேரடியாகக் காட்டுகிறார். நம்மில் மிகப்பெரிய வளர்ச்சியையும், அவருடைய ராஜ்யத்திற்கு மிகப் பெரிய தாக்கத்தையும் உருவாக்குவதற்குச் சரியாக என்ன தேவையோ அதை அவர் நமக்குத் தருகிறார். அவர் அதை எப்போதும் அன்பின் ஆவியில் கொடுக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவனின் பல நாமங்களில் இருந்து, அவருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரது இயல்புகளின் அம்சங்களை அவர் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்குப்புறமே, தேவனின் 80 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாமங்களை வேதாகமம் காண்பிக்கிறது. ஒரே உண்மையான தேவனிடம் நெருங்கி வர விசுவாசிக்கு உதவும் ஆறு பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன. டாக்டர். டோனி எவன்ஸ் எழுதிய கடவுளின் நாமங்களின் வல்லமையை அனுபவிப்பது: ஜீவன் கொடுக்கும் பக்திக்குரியன. ஹார்வெஸ்ட் ஹவுஸ் பப்ளிஷர்ஸ், யூஜின், ஓரிகான் 2017.
More