குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்மாதிரி

உன் தவறு உன்னை முன் நிறுத்தினால் நீ என்ன செய்வாய்?
நீ தவறு செய்யும்போது எப்படி நடந்துகொள்வாய்? உதாரணமாக…
- தவறான நபருக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிறகு நீ எப்படி உணர்வாய்?
- உன் கோபத்தை உன் குழந்தைகள் மீது காட்டிய பின்பு எப்படி உணர்வாய்?
- முக்கியமாக கட்ட வேண்டிய கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த மறந்துவிட்டால் என்ன செய்வாய்?
- யாரையாவது சரியாக அங்கீகரிக்க மறந்துவிட்டால் உன் மனநிலை எப்படி இருக்கும்?
பெரும்பாலான நேரங்களில், நம் தவறுகளை நாம் சரியான விதத்தில் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. அதற்குப் பதிலாக, குற்ற உணர்ச்சியில் சிக்கிக்கொள்கிறோம். ஆனால் நாம் அதைப் பற்றி உண்மையிலேயே சிந்தித்தால், நம் தவறுகள் திருத்தத்தைக்கொண்டுவரும் அளவிற்கு விலையேறப்பெற்றவை என்பது நமக்குப் புரியும்: அவை நம் காரியங்களைத் திருத்தி, சிறப்பாகச் செய்ய நமக்குக் கற்பிக்கின்றன. ஒரு நபர் இவ்வாறு சொன்னார், "தவறுகள் செய்கிறோம் என்றால், வேகமாகக் கற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம்."
இன்று, உன் தவறுகள் எதற்கு நேராக உன்னை நடத்துகிறது என்று சிந்தித்துப்பார்: ஒரு படி மேலே செல்வதற்கும், இன்னும் விரைவாகக் கற்றுக்கொள்வதற்கும், காரியங்களைச் சிறப்பாகச் செய்வதற்கும் அது ஒரு ஆரம்ப படியாக இருக்கும். அந்தத் தவறுக்கான அடுத்த படி, உன் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியாகவோ அல்லது உன்னை நிரந்தரமாகக் குற்றப்படுத்தும் ஆக்கினைத்தீர்ப்பாகவோ இருக்காது.
“ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று வேதாகமம் சொல்கிறது. (ரோமர் 8:1)
இனியும் உன்னை எதுவும் ஆக்கினைக்குட்படுத்துவதில்லை அல்லது குற்றம் சாட்டுவதில்லை. உன் தவறுகளும் உன்னை ஆக்கினைக்குட்படுத்துவதற்கோ அல்லது குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கோ அல்ல. மாறாக, நீ விரைவாகக் கற்றுக்கொள்ள அவைகள் உனக்கு உதவுகின்றன.
எனவே, உன் தலையை உயர்த்தி, ஆக்கினைத்தீர்ப்பை அல்ல, அதற்குப் பதிலாக கிருபையையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=carryingoutguilt
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

ஆண்டவருடன் ஒரு உறவை வளர்த்துக்கொள்

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

கவலையை மேற்கொள்ளுதல்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
