சீடத்துவம்மாதிரி

சீடத்துவம்

3 ல் 3 நாள்

ஒரு சீஷனுக்கு இன்றியமையாதது எது?

இந்த வாரம், “சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.” என்பதைப் பார்த்தோம். (லூக்கா 6:40)

இயேசுவின் சீஷனாக மாறுவதற்கும், அவரைப்போல வளருவதற்கும் அதிக சமயம் தேவைப்படும்... அதுவும், வாழ்நாள் முழுவதும் அதற்கு தேவைப்படும்! ஆனால் இந்தப் பயணத்தின்போது உண்மையிலேயே ஒரு விஷயம் முக்கியமானதாக இருக்கிறது, அது: இயேசுவுடன் நேரத்தை செலவிடுவதுதான்.

கூடலூரைச் சேர்ந்த மேரி எனக்கு இந்த சாட்சியை அனுப்பியிருந்தார்: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்தியை வாசிப்பதன் மூலம், ஆண்டவர் ஜீவிக்கிறார் என்பதை இப்போது நான் உறுதியாக நம்புகிறேன். எனது சந்தேகம் மற்றும் சிரமத்தின் தருணங்களில் எப்போதும் அவரை நம்பும்படி அவர் என்னிடம் கேட்கிறார்; அதைத்தான் நான் செய்து வருகிறேன். மற்றவர்களைப் பற்றிய எனது பார்வை மாறிவிட்டது; நான் அதிக சகிப்புத்தன்மை கொண்டவளாய் இருக்கிறேன். அவருக்குக் கீழ்ப்படிவதற்கான அவருடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்வதே எனது முன்னுரிமை, மேலும் ஒவ்வொரு நாளும் வேதாகமத்தை வாசிக்கத் தீர்மானித்துள்ளேன்.”

ஆண்டவருடைய வார்த்தையை நன்கு புரிந்துகொள்வதும், ஒவ்வொரு நாளும் அதை வாசிப்பதும் ஒரு சீஷனுக்கே உரிய இன்றியமையாத முன்னுரிமையாகும். ஏனென்றால் நீ அதை வாசிக்கும்போது:

  • அவருடைய அறிவுரைகளைப் பெறுவாய்,
  • அவரது இதயத்தைப் புரிந்துகொள்வாய்,
  • மேலும் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்வாய்.

இவ்வாறு செய்வதால், வேத வசனத்தின்படி உண்மையாக, ஆண்டவர் உனக்காக விரும்பும் ஒரு வாழ்க்கையை நீ வாழ முடியும்!

இந்த நாள் முழுவதும் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

சீடத்துவம்

நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. எசேக்கியேல் 38:7 ஆண்டவருடைய வார்த்தையின்படி நீ அநேக ஆத்துமாக்களை அவர் வருகைக்காக ஆதாயப்படுத்த விரும்புகிறாயா? ஆனால் எப்படி துவங்குவது அல்லது எப்படி இதை செயல்படுத்துவது என்று தெரியவில்லையா? இந்த திட்டம் உனக்கானது. நீயும் ஆண்டவருடைய ஒரு சீடராக எப்படி வாழ்வது என்பதை பற்றி விரிவாக இந்த திட்டத்தில் வாசிப்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=discipleship
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்