சீடத்துவம்மாதிரி
சீஷன் ஊக்கமளிக்கும் ஒரு நபர்...
நான் அடிக்கடி இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்: ஒருவரை ஊக்குவிக்க இன்று நான் என்ன செய்யலாம்? நான் யாரைப் பார்க்க வேண்டும், நான் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவித்து, ஆண்டவர் என்னை வழிநடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் மூலம் அவர் என்னை இவ்வாறு (மற்றவர்களை ஊக்குவிக்க) பயன்படுத்த முடியும்.
வேதாகமம் கூறுகிறது: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்." (ஏசாயா 50:4)
இதை நீயும் செய்ய முடியும்: தினமும் காலையில், ஆண்டவர் சொல்வதைக் கேள். உன் பாதையில் அவர் முன் குறித்து வைத்திருக்கும் குறிப்பிட்ட நபர்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் உனக்குச் சொல்வார். அவர் சொல்வதைக் கேட்டு நீ அவர்களை ஊக்குவிக்கலாம். ஒரு சீஷராக நீ அவருடைய வார்த்தைகள், அறிவுரைகள், அவருடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவருடைய அழைப்பில் நிலைத்திரு. 😊
பொதுவாக, நான் ஆண்டவருடன் பேசும்போது, ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறேன். அப்போது, “இன்றைய தினம் அந்த நபரை ஊக்கப்படுத்து” மற்றும் அவரிடம் "தொடர்ந்து அக்கறைகாட்டு" என்று பரிசுத்த ஆவியானவர் என்னிடம் சொல்கிறார் என்று நான் நம்புகிறேன். இதுபோன்று இன்னும் அநேக சம்பவங்களை நான் சொல்லலாம்.
சமீபத்தில், இது எனக்கு நடந்தது, நான் என் நண்பர்களில் ஒருவரை திடீரென நினைத்தேன். நான் அவரைத் தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசினேன். அப்போதுதான், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில், வெளிநாட்டில் தனிமையில் வாழ்ந்து வந்ததை அறிந்துகொண்டேன்.
எனவே, உன் இதயத்தில் ஆண்டவரிடமிருந்து ஒரு ஏவுதலை நீ உணர்ந்தால், அந்த நபரை உடனடியாக அழைத்துப் பேசு அல்லது ஒரு செய்தியை அவருக்கு அனுப்பு. உன் சிறிய செயல் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். என்னை நம்பு! ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக! கர்த்தர் என் நண்பரை ஆரோக்கியமாக மீட்டெடுத்து, அவருக்கு வாழ்வளித்தார்.
பரிசுத்த ஆவியானவர் தாமே உன்னை வழிநடத்துவாராக. இன்று நீ யாரை, எப்படி ஊக்குவிக்க முடியும் என்பதைக் காட்டும்படி ஆண்டவரிடம் கேள். பெரும்பாலும் இந்த சிறிய விஷயங்கள்தான் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்... "ஆண்டவரே, நான் ஏற்கனவே கேட்டதை விடவும் அதிகமாக உமது குரலைக் கேட்க விரும்புகிறேன்! உமது சத்தத்தின் அழகிற்கு என் செவிகளையும், உமது வழிகளின் மகத்துவத்தை உணர என் இதயத்தையும் திறந்தருளும். நீர் என்னிடம் கேட்பதற்கு செவி சாய்த்து, அதற்கேற்ப பதிலளிப்பதையே நான் தேர்வு செய்கிறேன். எனக்குத் தேவைப்படுகிற, சித்தம், அறிவு, தாழ்மை, தைரியம் ஆகிய அனைத்தையும் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
பிறரை ஊக்குவிக்கத் தேவையான வார்த்தைகளை ஆண்டவர் உனக்கு வழங்குவாராக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. எசேக்கியேல் 38:7 ஆண்டவருடைய வார்த்தையின்படி நீ அநேக ஆத்துமாக்களை அவர் வருகைக்காக ஆதாயப்படுத்த விரும்புகிறாயா? ஆனால் எப்படி துவங்குவது அல்லது எப்படி இதை செயல்படுத்துவது என்று தெரியவில்லையா? இந்த திட்டம் உனக்கானது. நீயும் ஆண்டவருடைய ஒரு சீடராக எப்படி வாழ்வது என்பதை பற்றி விரிவாக இந்த திட்டத்தில் வாசிப்போம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=discipleship