ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்மாதிரி

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

7 ல் 7 நாள்

இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை?

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் பற்றிய நமது தொடரின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்; மேலும் இந்த பயணத்தை முடிக்கும் முன், ஆண்டவர் உனக்கும் எனக்கும் அவருடைய வார்த்தையில் கொடுத்துள்ள பல வாக்குத்தத்தங்களை உனக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பது என் இதயத்தின் நோக்கமாக இருக்கிறது.

இன்று உனக்கு என்ன தேவை? உன் தேவை எதுவாக இருந்தாலும் சரி, அதற்குப் பொருந்தும் வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன்:

உனக்கு ஞானம் தேவையா? அதை ஆண்டவரிடம் கேள்: யாக்கோபு 1:5

ஆண்டவர் உன் தேவைகளை சந்திக்க வேண்டுமா? இந்த வசனத்தைப் பற்றிக்கொள். பிலிப்பியர் 4:19

உனக்கு மன்னிப்பு தேவையா? 1 யோவான் 1:9 உனக்கு மன்னிப்பு இருக்கிறது என்று உறுதியளிக்கிறது.

உனக்கு இன்னும் அதிக சமாதானம் அல்லது பொறுமை தேவையா? கலாத்தியர் 5:22-23 அதை எப்படிப் பெறுவது என்பதைக் காட்டுகிறது.

உனக்கு பரிபூரண சுகம் தேவையா? உன்னைக் குணப்படுத்துவதாக ஆண்டவர் உறுதியளிக்கிறார்: எரேமியா 30:17

நீ ஆபத்தான நிலையில் இருப்பதைப் போல் உணர்கிறாயா? ஆண்டவர் உன்னைப் பாதுகாப்பதாக வாக்களிக்கிறார்: சங்கீதம் 91:10

நீ ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து பயப்படுகிறாயா? ஆண்டவர் உன்னை விடுவிக்கிறார்: சங்கீதம் 34:4

உனக்கு ஆறுதல் தேவைப்படுகிறதா? வெளிப்படுத்துதல் 21:4 உனக்குள்ள சக்திவாய்ந்த ஊக்கமாகும்.

ஆண்டவர் வாக்குத்தத்தங்களின் ஆண்டவராய் இருக்கிறார்; அவை ஜீவன், சமாதானம் மற்றும் ஜெயத்தை அளுவதற்கான வாக்குத்தத்தங்கள்! "... அவர் வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவர்" (ரோமர் 4:21)

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா? ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா? ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன? வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்? வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா? இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை? இவைகளை பற்றிய விஷயங்களை இந்த திட்டத்தில் காணலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=godspromises