ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்மாதிரி

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

7 ல் 1 நாள்

ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா?

ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீ எப்போதாவது யோசித்ததுண்டா?

சொல் அகராதியின்படி, வாக்குத்தத்தம் என்பது "ஏதேனும் ஒன்று செய்யப்படும் அல்லது செய்யப்படாது என்று சொல்லப்படும் பிரகடனம்" மற்றும் "எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளிப்படையான உத்தரவாதம்" ஆகும்.

மனிதனுக்கு வாக்குப்பண்ணுவது அவசியம் என்று ஆண்டவர் கண்டார்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் எப்போதும் நம்மை கவனத்தில் வைத்திருக்கிறார் என்பதை நமக்கு விளங்கப்பண்ணுகிறார்.

மனிதனுக்குத்தான் வாக்குத்தத்தம் தேவையே தவிர‌, ஆண்டவருக்கு அது தேவையில்லை! மனிதர்களாகிய நாம் ஆண்டவர் மீது வைக்கும் விசுவாசம் சரியானது, நியாயமானது, மற்றும் அவரிடத்தில் நமது எதிர்பார்ப்பு ஒருபோதும் ஏமாற்றமடையாது என்ற உறுதி எப்போதும் நமக்குத் தேவை.

நீ ஆண்டவரை விசுவாசிப்பது சரியானது, ஏனென்றால், "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" (எண்ணாகமம் 23:19)

ஆண்டவர் உன்னை மிகவும் நேசிக்கிறார் என்பதை உனக்குக் காட்ட விரும்புவதால், அவர் தமது வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார் என்று நான் நம்புகிறேன்‌.

நீ அவருடைய பார்வையில் விலையேறப்பெற்ற நபர், எனவே ஆண்டவர் உனக்கு உறுதியானதும் நிலைத்திருப்பதுமான வாக்குத்தத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்.

இந்த வாரம் உனக்கு ஒரு சிறந்த வாரமாக அமைய நான் உன்னை வாழ்த்துகிறேன்! இந்த வாரம் முழுவதும், ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் உனக்கானது என்பதை மறந்துவிடாதே.

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா? ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா? ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன? வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்? வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா? இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை? இவைகளை பற்றிய விஷயங்களை இந்த திட்டத்தில் காணலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=godspromises