ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்மாதிரி

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

7 ல் 5 நாள்

வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்?

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் பற்றிய நமது தியானத்தைத் தொடரும் இத்தருணத்தில், இன்று நான் உன்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.

உனக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்படும்போது, உன் அணுகுமுறை எப்படி இருக்கும்? ஆண்டவருடைய வார்த்தையில் உள்ள வாக்குத்தத்தங்களில் ஒன்றை வாசிக்கும்போதும்

தனிப்பட்ட விதத்தில் உனக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்படும்போதும், அதைக் கேட்ட உடனே நீ எப்படி நடந்துகொள்வாய்?

அது உனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதா அல்லது பயத்தைத் தூண்டுகிறதா? அது உன் விசுவாசத்தைப் பெருகச் செய்கிறதா அல்லது உனக்குள் சந்தேகம் எழுகிறதா? வாக்குத்தத்தைப் பொறுத்து நாம் வெவ்வேறு விதத்தில் செயல்படக் கூடும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் ஆண்டவர் நம்மை முழுமையாக அறிவார்! நமது சூழ்நிலை மிகவும் சிக்கலானதாகவோ அல்லது தீர்க்க முடியாத பிரச்சனை நிறைந்ததாகவோ இருப்பதால் சில வாக்குத்தத்தங்கள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தலாம்;

நமக்கு சந்தேகத்தைக் கூட எழுப்பிவிடலாம். பிள்ளை பெறுவோம் என்ற நம்பிக்கை சாராளுக்கு அற்றுப்போயிற்று. ஆண்டவர் அவளுக்கும் அவள் கணவருக்கும் ஒரு சந்ததியைக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் அளித்திருந்தார்.

பின்னர் நாட்கள் கடந்தன... மாதங்கள் கடந்தன... பின்னர் ஆண்டுகளும் கடந்து சென்றன... காலம் கடந்து சென்றதைப்போலவே, சாராளின் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பும் அவளது விசுவாசமும் அவளை விட்டுச் சென்றுவிட்டன.

பின்னர் ஒரு நாள் வந்தது, ஆண்டவர் மீண்டும் ஆபிரகாமிடம் பேசினார்: "அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்;

அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்.” (ஆதியாகமம் 18:10)

வேத வரலாற்றுக் குறிப்புப்படி, சாராள் விரக்தியால் நிரம்பியிருந்தாள், "சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்" (ஆதியாகமம் 18:12)

ஆனாலும், ஒருநாள் உரைக்கப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறியது! ஒரு வருடம் கழித்து, ஈசாக்கு பிறந்தார்! ஈசாக்கு என்ற பெயருக்கு "நகைப்பு" அல்லது "அவன் நகைப்பவன்" என்று அர்த்தம் என்பது உனக்குத் தெரியுமா? சாரா மட்டும் நகைக்கவில்லை - ஆபிரகாமும் நகைத்தார் (ஆதியாகமம் 17:17).

நீ இங்கே பார்க்கிறபடி, வாக்குத்தத்தத்தை நிறைவேற்றா வண்ணம் எதுவும் ஆண்டவரைத் தடுப்பதில்லை; உன் சந்தேகமோ அல்லது உன் விரக்தியோ அதைத் தடுக்க முடியாது. வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றம் உன் கரத்தில் அல்ல, அது இயேசுவின் கரத்திலே உள்ளது; வாக்குத்தத்தம் நிறைவேறும்படிக்கு அவரே சகலத்தையும் செய்து முடித்தார்!

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா? ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா? ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன? வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்? வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா? இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை? இவைகளை பற்றிய விஷயங்களை இந்த திட்டத்தில் காணலாம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=godspromises