ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி?மாதிரி

தவறு செய்வேனோ என்று எண்ணி தயங்கி நின்றுவிடாதே!
'அனுதினமும் ஒரு அதிசயம்' மின்னஞ்சலுக்காக எழுதும்போது, பரிசுத்த ஆவியானவர் என் ஆவியில் ஏவுதல் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் நான் எழுத வேண்டிய வரிகளின் எண்ணிக்கையையோ அல்லது இறுதி வடிவமைப்பையோ பற்றிக் கவலைப்படாமல், விதிகளைத் தாண்டி எழுதுவதற்கான சுதந்திரத்தை எனக்கு நானே பெற்றிருப்பதை விரும்புகிறேன். அந்த எழுத்துக்களை மீண்டும் சரிசெய்து திரையில் கொண்டுவரும் முன் என் சிந்தனை அனைத்தையும் அந்தப் பக்கத்தில் கொண்டுவர விரும்புவேன். எனது சிந்தனையோ அல்லது வேகமோ தடுத்து நிறுத்தப்படாமல் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமானதாக இருக்க இது எனக்கு உதவுகிறது!
பெரும்பாலும், நாம் பரிபூரணப்பட்டவர்களாக இல்லை என்று நினைத்து பயப்படுவதால், ஒரு செயலைச் செய்வதற்கு நம்மை நாமே தடுத்து நிறுத்திக்கொள்கிறோம். உன் இருதயத்தில் இந்தத் திட்டத்தை வைத்திருக்கிறாய், ஆனால் அது தோல்வியுற்றால் என்ன செய்வது என்று பயப்படுகிறாய். நான் இந்தப் புத்தகத்தை எழுத விரும்புகிறேன், ஆனால் அதை சரியாக எழுதாவிட்டால் என்ன செய்வது? நான் ஒரு தன்னார்வலராக ஈடுபட விரும்புகிறேன், ஆனால் எனக்குப் போதுமான திறமை இல்லை என்றால் என்ன செய்வது? இது போன்ற பயங்கள் நிறையவே உன் உள்ளத்தில் காணப்படுகின்றன.
மிகச்சரியான நபராக இருக்க நாடுவது பெரும்பாலும் காரியங்களைத் தள்ளிப்போடுவதற்கு வழிவகுக்கிறது... அதாவது, அதை அடுத்தநாள்வரை தள்ளிப்போடச் செய்கிறது. இன்று உன் விதிகளை மறுசீரமைத்தால் எப்படி இருக்கும்? ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பதாகவே, நீ அடைய வேண்டிய பொருள் உனக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்று நீ நினைத்தால், நீ ஒருபோதும் அதைச் செய்யத் தொடங்க மாட்டாய்!
சில நேரங்களில், "பரிபூரணமானது பரிபூரணமின்மையில் காணப்படுகிறது." மனிதனாக இருப்பதின் மேன்மையே தவறு செய்வதும், மீண்டும் முயற்சி செய்து தவறைத் திருத்திக் கொள்வதுமே ஆகும், அப்படித்தானே? ஆண்டவர் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரே தவிர பரிபூரணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பதில்லை.
பரிபூரணத்தை எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு, உறுதியுடன் முன்னேறிச் செல்! ஆண்டவரையும், அவருடைய ஞானத்தையும் சார்ந்திரு. வேதாகமத்தில் 1 நாளாகமம் 16:11-13ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்... அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்.”
தவறு செய்வோம் என்ற பயம் உன்னை செயலாற்ற முடியாத இடத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தரிடமாக சாய்ந்து, உன் குறைபாடுகளை அவரிடம் வைத்துவிடுமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன்.
இன்று நான் உனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்… “கர்த்தாவே, க்கு தைரியத்தைக் கொடுப்பீராக. உமது சித்தத்தின்படி வாழ உதவும், 'முன்னோக்கிச் செல்' என்று நீர் சொல்லும்போது, முன்னேறும்படி உதவுவீராக! பரிபூரணமுள்ள நபராக இருப்பதற்கான விருப்பம் இவரது முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடாது! நீர் ஆகிய இவரிடம் எதைக் கேட்கிறீரோ அதை இவர் எழுந்து செய்யும்படி நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

Description: உன் கடந்த கால வாழ்வு உன்னை முன்னேறவிடாமல் தடுக்கிறதா? தவறு செய்துவிடுவேனோ என்று எண்ணி தயங்கி நிற்கிறாயா? "ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி" என்ற இந்த தியானத்தின் மூலம், உன் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களிலும் முன்னேறுவதற்கான பல திறவுகோல்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென என் இருதயத்தில் வாஞ்சிக்கிறேன்! பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, தடைகளைத் தகர்த்தெறிகிற ஆண்டவரோடு இணைந்து முன்னணறிச் செல்வாயாக.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=becomeunstoppableforgod
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
