ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி?மாதிரி

அர்ப்பணித்தல் ஜெயத்தைத் தரும்!
அர்ப்பணித்தல். இது பெரும்பாலும் எதிர்மறையான அர்த்தத்தைக் கொண்ட வார்த்தைகளான கைவிடுதல், விட்டுக்கொடுத்தல் போன்ற வார்த்தைகளுக்கு இணையான ஒரு சொல்லாக இருக்கிறது. அது துயரம் நீக்கும் ஒரு சொல்லாகவோ, சமாதானம் அல்லது மகிழ்ச்சியைத் தூண்டும் ஒரு சொல்லாகவோ இருப்பதில்லை, ஆனாலும் சில சமயங்களில் அது உண்மைதான்.
நாம் தவறான யுத்தத்தில் போராடுவதால் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளலாம். தவறான போர்க்களத்தில் நமது பலத்தையும் கவனத்தையும் செலுத்துவதே நமது தடைக்குக் காரணமாகும். நாம் திட்டங்களை உருவாக்கி, உத்திகளைக் கொண்டு வருகிறோம் என்று நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் தூண்டிவிட்டு, இறுதியில் மீண்டும் மற்றொரு சிக்கலில் நாமாகவே மாட்டிக்கொள்கிறோம். ஆண்டவருடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் சார்ந்துகொள்வதற்குப் பதிலாக நமது புத்தியைப் பயன்படுத்திப் போராடத் துவங்குகிறோம்.
பின்னர் நாம் ஆண்டவரிடத்தில், “ஆண்டவரே ஏன் இப்படி நடந்தது? எனக்கு என்ன தேவை என்பது மற்றவர்களை விட உமக்கு நன்றாகத் தெரியாதா? காலக்கெடுவை நீர் கவனிக்கவில்லையா? நீர் சுலபமாக திறக்கக்கூடிய இந்தக் கதவை ஏன் எனக்காகத் திறக்கவில்லை?"
ஆண்டவர் சகலத்தையும் அறிந்த சர்வஞானியாய் இருக்கிறார். அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார். அதனால் எது தடை செய்கிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
ஆண்டவர் சர்வவல்லமை படைத்தவர். அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். ஆகவே அவர் செயல்படவும் இடைபடவும் முடியும்.
ஆனால் எல்லாவற்றையும் அறிந்தவரும், எல்லாவற்றையும் செய்யக்கூடியவருமான இந்த ஆண்டவர் எல்லாவற்றையும் விட உன்னை நேசிக்கும் ஆண்டவராய் இருக்கிறார்! மேலும் அவர் தமது அன்பினால், ஏன் "இந்தக் கதவு" மூடியிருக்க அனுமதித்திருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியும்.
வேதாகமம் சொல்கிறது, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." (நீதிமொழிகள் 3:5-6)
உன் சொந்தத் திட்டங்களைச் செயல்படுத்தப் போராடுவதை நிறுத்திவிட்டு, உன்னை முழுமையாக சர்வவல்லமையுள்ளவரிடம் ஒப்படைப்பதுதான் ஆண்டவருக்குப் பிரியமான அர்ப்பணிப்பாகும். இதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். அவருடன் போராடுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக, "ஆண்டவரே, என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்? நீர் எனக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறீர்? நீர் என்னை எப்படிப் பயன்படுத்த விரும்புகிறீர்?" என்று கேட்பதைத் தெரிந்துகொள்.
நீ கர்த்தரிடத்தில் உன்னை அர்ப்பணித்து, உன் விருப்பத்தை அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்பினால், என்னுடன் சேர்ந்து ஜெபம் செய்ய உன்னை அழைக்கிறேன்... “கர்த்தாவே, என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக. என் வாழ்வில் உமது சித்தம் நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன், ஏனென்றால் உமது சித்தம் மாத்திரமே என் வாழ்க்கைக்கான சரியான திட்டமாக இருக்கும்! என் இருதயத்தை நீர் நிரப்ப வேண்டுமென்று மன்றாடுகிறேன். உமது விருப்பங்கள் என்னுடைய விருப்பங்களாக மாறட்டும்! நான் விரும்புவதைப் பெற்றுக்கொள்ளும்படி போராடிக்கொண்டிருப்பதை நிறுத்த எனக்கு உதவும். ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால், அது உமது தெய்வீக திட்டத்தின்படியே நடக்கும் என்பதை முழுமையாக அறிந்து வாழ எனக்கு உதவுவீராக. நீர் என்ன செய்யச் சொல்கிறீரோ அதை மட்டுமே நான் செய்ய வேண்டும். மற்ற அனைத்து காரியங்களையும் நீரே எனக்காக செய்வீர் என்று நம்புகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

Description: உன் கடந்த கால வாழ்வு உன்னை முன்னேறவிடாமல் தடுக்கிறதா? தவறு செய்துவிடுவேனோ என்று எண்ணி தயங்கி நிற்கிறாயா? "ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி" என்ற இந்த தியானத்தின் மூலம், உன் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களிலும் முன்னேறுவதற்கான பல திறவுகோல்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென என் இருதயத்தில் வாஞ்சிக்கிறேன்! பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, தடைகளைத் தகர்த்தெறிகிற ஆண்டவரோடு இணைந்து முன்னணறிச் செல்வாயாக.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=becomeunstoppableforgod
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்
