தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?மாதிரி
தாழ்மை இவ்வுலகில் போற்றப்படுவதில்லை...
கடந்த சில நாட்களாக, ஆண்டவருடைய பார்வையில் தாழ்மை மிக முக்கியமான குணம் என்றும், குறிப்பாக, அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்றும் அநேக பகுதிகளில் நாம் பார்த்திருக்கிறோம்! இருப்பினும், நாம் வாழும் உலகில், தாழ்மை எப்போதும் நேர்மறையான வெளிச்சத்தில் பார்க்கப்படுவதில்லை.
உண்மை என்னவென்றால், தாழ்மையுள்ளவர்கள் சில சமயங்களில் பலவீனமானவர்களும் பரிதாபத்திற்குரிய நபர்களுமாய் இருக்கிறார்கள் என்றும், ஒரு காரியத்தை சாதிக்க அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் மக்கள் (குறைந்தபட்சம் கற்பனையில்) நினைக்கிறார்கள். எனவே, வெற்றியை அடைவதற்கு நமது சமூகம் காட்டும் மாதிரியானது பலம், சத்துவம் மற்றும் போட்டியிடும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதால், தாழ்மை என்பது பலம் என்பதை விட பலவீனமாகவே உணரப்படுகிறது.
ஆனால்... இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.... உலகத்தின் பார்வை தவறானது! வேதாகமத்தில் சங்கீதம் 25:9ம் வசனம் கூறுகிறது, "சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்."
இன்று உனக்கும் எனக்கும் இது எதை அறிவிக்கிறது? தாழ்மை இந்த உலகில் பலவீனமாக கருதப்படுகிறது, ஆனால் ஆண்டவருடைய ராஜ்யத்தில், தாழ்மையானது ஆண்டவரால் வழிநடத்தப்படும் மற்றும் கற்றுக்கொள்ளும் பாக்கியத்தை நமக்கு வழங்கும் திறவுகோலாக இருக்கிறது.
ஏன்? நாம் தாழ்மையுடன் இருக்கும்போது, நம் வாழ்க்கையை ஆளுவதற்கு நாம் நம்முடைய சொந்த பலத்தையோ அல்லது புத்திசாலித்தனத்தையோ நம்புவதில்லை. எனவே, உன் தாழ்மையானது ஆண்டவரை அழைக்கவும், அவர் உன் வாழ்க்கையில் செயல்படவும் அசைவாடவும் இடமளிக்கும்! இது ஆண்டவரை அப்புறப்படுத்தி, அவரை செயல்படவிடாமல் தடுக்கும் குணமான பெருமைக்கு எதிரானது. ஏனென்றால் ஆண்டவர் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்.
தேவ ஆவியானவர் நீதியிலும் அவருடைய பரிபூரண வழிகளிலும் உன்னை வழிநடத்தும் வகையில், தாழ்மையை நாடி அதை உன் வாழ்வில் வளர்த்துக்கொண்டு, ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு உன்னை ஊக்குவிக்கிறேன்.
இன்று நினைவில்கொள்: தாழ்மை பலவீனம் அல்ல... அது உனக்கான பலம்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சில சமயங்களில், நீயும் நானும் பெருமையினால் நிரம்பிவிடுகிறோம். நாம் நமது சாதனைகளின் சிங்காசனத்தில் அமர்ந்துவிடுகிறோம், அப்படித்தானே? ‘தாழ்மையாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தாழ்மையாக இருப்பது எப்படி? தாழ்மை இவ்வுலகில் பாராட்டப்படுவதில்லையே’ என்று நினைக்கிறாயா? தாழ்மை பலவீனம் அல்ல... அது உனக்கான பலம்! அது உன் வாழ்வில் உயர்வைக் கொண்டுவரும். அந்த உயர்வைப் பெற நீ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தியானத்தின் மூலம் அறிந்துகொள்வாயாக!
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=humility