தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?மாதிரி

தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?

6 ல் 3 நாள்

தாழ்மையாக இரு... ஆனால் தாழ்மையாக இருப்பது எப்படி?

நாம் தாழ்மையைப் பற்றிப் பேசும்போது, பொதுவாக வெளிப்படையாக பெரிய விஷயங்களைச் செய்யும் ஒரு மனிதனைப் பற்றி நினைக்கிறோம் அல்லது குறை சொல்லாமல், களைப்பை வெளிக்காட்டாமல், பாராட்டை எதிர்பார்க்காமல் மணிக்கணக்கில் உழைக்கும் ஒரு பெண்ணைப் பற்றி நினைக்கிறோம்... ஆகவே, தாழ்மையைப் பற்றி நினைக்கும் வேளையில், ஒரு குழந்தையைப் பற்றி நாம் நினைப்பது மிகவும் அரிது.

ஆனாலும், இயேசு சொன்னார்: "ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்." (மத்தேயு 18:4)

ஆண்டவருடைய ஞானம் நம்முடைய ஞானத்தைவிட உயர்ந்தது... உண்மையான தாழ்மை எப்போதும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதில்லை என்பதை நம் பிதா நமக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும், இதை ஒரு குழந்தையினிடத்தில் பார்க்கலாம்.

13ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “நாம் கற்றுக்கொள்ள புறக்கணிப்பதை நமக்குக் கற்பிக்கும் திறன் பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு உயிரினத்திற்கும் உண்டு என்பதை ஒப்புக்கொள்வதை உள்ளடக்கியதுதான் தாழ்மை என்பது.” மனத்தாழ்மையைப் பற்றி குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுப்பதை நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?

ஆண்டவருடைய ராஜ்யத்தில் நாம் பெரியவர்களாக மாற விரும்பினால், குழந்தைகளைப்போல நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று இயேசு நமக்குக் கற்பிக்கிறார். நாம் ஆண்டவரால் மாற்றப்பட்டு, இந்த சிறு குழந்தைகளைப்போல் மாறுவோம்: இருதயத்தில் எளிமையானவர்களாக, மகிழ்ச்சியுள்ளவர்களாக, மென்மையானவர்களாக மற்றும் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களாக மாறுவோம்.

இக்காரியத்திற்காக என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறாயா? "பிதாவே, என் வாழ்க்கை எனும் ஈவிற்காக நான் நன்றி கூறுகிறேன். என்னை உம் பிள்ளையாக மாற்றியதற்கு நன்றி. ஒவ்வொரு நாளும் மனத்தாழ்மை எனக்குள் வளர எனக்கு உதவுவீராக. இயேசுவைப்போல நான் மென்மையாகவும், மனத்தாழ்மையாகவும் மாறுவேனாக. உமது விருப்பப்படி செயல்படவும் பேசவும் உமது நாமத்தை மகிமைப்படுத்தவும், எனக்கு உதவுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

மறந்துவிடாதே... ஆண்டவருடைய ராஜ்யத்தில் பெரியவனாக / பெரியவளாக இருக்க வேண்டும் என்றால், நீ ஒரு சிறு குழந்தையைப்போல உன்னைத் தாழ்த்த வேண்டும்!

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

தாழ்மை நம் வாழ்வில் அவசியமா?

சில சமயங்களில், நீயும் நானும் பெருமையினால் நிரம்பிவிடுகிறோம். நாம் நமது சாதனைகளின் சிங்காசனத்தில் அமர்ந்துவிடுகிறோம், அப்படித்தானே? ‘தாழ்மையாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தாழ்மையாக இருப்பது எப்படி? தாழ்மை இவ்வுலகில் பாராட்டப்படுவதில்லையே’ என்று நினைக்கிறாயா? தாழ்மை பலவீனம் அல்ல... அது உனக்கான பலம்! அது உன் வாழ்வில் உயர்வைக் கொண்டுவரும். அந்த உயர்வைப் பெற நீ என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தியானத்தின் மூலம் அறிந்துகொள்வாயாக!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=humility