குயவன் கரங்களில் பாண்டம்மாதிரி
நாம் ஆண்டவரால் ஆண்டவருக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள்
நாம் அவராலும் அவருக்காகவும் செய்யப்பட்ட பூமிக்குரிய மட்பாண்டங்களாய் இருக்கிறோம். அவர் உன்னை எப்படிப் பயன்படுத்துவார் என்பது முக்கியமல்ல; அவரால் நீ பயன்படுத்தப்படப்போகிறாய் என்பதே முக்கிய விஷயம்.
எரேமியா 18:4 - "குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம்..." மற்றவர்களைப்போல இருக்க விரும்புவதால் வாழ்நாள் முழுவதையும் விரக்தியில் கழிப்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஒரு பாத்திரமாக பயன்படுத்தப்படுவது என்றால், கைகளில் மைக்குடன் பிரசங்க மேடையில் நின்றுகொண்டு பாடுவது அல்லது பிரசங்கிப்பது என்று நினைத்துக்கொண்டு, அதைச் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரைப்போல இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்புகிறார்கள். அத்தகைய செயல்களை அல்லது பொறுப்புகளை ஏற்று, நிறைவேற்ற அவர்கள் குயவன் வனையும் சக்கரத்தில் அதிக நேரம் செலவழித்திருக்கலாம் மற்றும் குயவனின் கையில் பல முறை உடைந்துபோயும் இருக்கலாம். இதைப் புரிந்துகொள். அநேகர் மற்றவர்களைப்போல அதே மாதிரியாக இருக்கவோ அல்லது அதே மாதிரியான செயல்களைச் செய்யவோ விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் அதே பாதை வழியாகக் கடந்துசெல்ல விரும்புவதில்லை.
கோலியாத்தை தோற்கடிக்க விரும்பும் பலர் உள்ளனர், ஆனால் சிங்கத்தையோ கரடியையோ ஒருபோதும் எதிர்கொண்டதில்லை. சரியான பாதை வழியாகக் கடந்து செல்லாமல் ஆசீர்வாதத்தின் பாத்திரமாக இருக்க விரும்புவது பெரும்பாலும் தோல்வி மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது, ஏனென்றால் அவர்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்வதில் உள்ள சிக்கல்களை அலட்சியம்பண்ணுகிறார்கள்.
ஏசாயா 29:16 - "குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?"
ஆண்டவர் ராஜரீகமுள்ளவர் என்பதையும் உன் வாழ்க்கைக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார் என்பதையும் நீ உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது. நீ களிமண் என்பதை புரிந்துகொள்வது என்பது உன்னை அறிந்தவரும் உன் வாழ்க்கைக்கு ஒரு விசேஷித்த நோக்கத்தை வைத்திருப்பவருமான ஆண்டவரால் வடிவமைக்கப்பட்ட தூசிதான் நீ என்பதை ஒப்புக்கொள்வதாகும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆண்டவரின் வார்த்தையில் உள்ள ஐசுவரியத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம், 18ஆம் அத்தியாயத்திற்கு நமது கவனத்தைத் திருப்புவோம், அங்கு ‘குயவன் கரங்களில் உள்ள பாண்டம்’ - என்ற இந்த வல்லமை வாய்ந்த, ஊக்கமளிக்கும் பத்தியை நாம் தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=potter