குயவன் கரங்களில் பாண்டம்மாதிரி

குயவன் கரங்களில் பாண்டம்

7 ல் 5 நாள்

குவளை வடிவம் பெறுகிறது

"குவளை தான் விரும்பிய வடிவத்தைத் தானே தீர்மானிக்க முடியாது; அதை குயவன்தான் தீர்மானிக்க வேண்டும்”. ஆண்டவர் உனக்காக திட்டங்களை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம், நீ வாழும் முறைக்கு இணங்கவோ அல்லது உன் திட்டங்களுக்கு ஏற்ப செயல்படவோ வேண்டும் என்ற அவசியம் தேவனுக்கு இல்லை. சில சமயங்களில், நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கடினமானதும் சவாலானதுமான சூழ்நிலைகளை சந்தேகப்பட்டு, அவரது செயல்களை எதிர்க்க முயல்கிறோம். இருப்பினும், அந்தக் களிமண்ணுக்கு எது சிறந்தது என்பதைக் குயவன் அறிந்துவைத்திருப்பதைப்போல, நமக்கு எது சிறந்தது என்பதை ஆண்டவர் நன்கு அறிவார். நாம் ஆண்டவரை நம்ப வேண்டும்.

எரேமியா 18:4 - 'தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.'

இப்படிப்பட்ட தருணங்களில்தான் ஆண்டவர் உன்னை சிறந்த வகையில் வடிவமைக்கிறார். அவருடைய கரங்களில் உன்னை மிகவும் பயனுள்ள பாத்திரமாக மாற்ற அவர் உன்னை மீண்டும் வடிவமைக்க வேண்டும். குயவனின் வீடு ஆண்டவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. களிமண் அதன் சொந்த வடிவத்தைத் தீர்மானிக்க முடியாததுபோல, நமக்கு எது சிறந்தது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார் என்று நாம் அறிந்துணர வேண்டும்.

இது அர்ப்பணித்தல், பணிவு மற்றும் ஆண்டவரது ராஜரீகத் திட்டத்தில் நம்பிக்கை கொண்டிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆண்டவர் உன்னை வடிவமைக்கட்டும்; பாத்திரத்தின் வடிவம் மிகவும் முக்கியமானது அல்ல, மாறாக நாம் ஒரு விசேஷித்த நோக்கத்திற்காக ஆண்டவரின் கரங்களால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பதே முக்கியமாகும்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

குயவன் கரங்களில் பாண்டம்

ஆண்டவரின் வார்த்தையில் உள்ள ஐசுவரியத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம், 18ஆம் அத்தியாயத்திற்கு நமது கவனத்தைத் திருப்புவோம், அங்கு ‘குயவன் கரங்களில் உள்ள பாண்டம்’ - என்ற இந்த வல்லமை வாய்ந்த, ஊக்கமளிக்கும் பத்தியை நாம் தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=potter