கிருபையின் கீதம்மாதிரி
![கிருபையின் கீதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F45636%2F1280x720.jpg&w=3840&q=75)
ஒவ்வொரு நாளும் அவைகளின் குரல்களைக் கேட்கலாம். சில உங்கள் மனதில் இருக்கும். சிலர் சமூக ஊடக ஊட்டத்தில் இருப்பார்கள். சிலர் நண்பர்களாக இருப்பார்கள். சிலர் உங்களை வெளிப்படையாக வெறுக்கும் நபர்களாக உருவாகி இருப்பார்கள்.
நீங்கள் யார் என்பதையும், நீங்கள் இருக்க வேண்டிய நபராக மாற என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்ல முயற்சிக்கும் குரல்கள் அவை.
அந்தக் குரல்களுடன் ஒரு பிரச்சனை, அவர்கள் கொடுக்கிற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. உங்கள் அடையாளம் என்பது உங்கள் சம்பாத்தியமோ, சொந்தமாக கண்டுபிடிக்க வேண்டியதோ அல்லது பாதுகாக்க பாடுபட போராடுவதோ அல்ல. இது தேவனிடமிருந்து கிடைத்த வரம், இன்று அதைக் கண்டறிய உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.
"இயேசுவில், நாம் நமது உண்மையான சுயத்தை இழக்கவில்லை, மாறாக அவரில் மட்டுமே நாம் உண்மையானவர்களாக மாறுகிறோம்." என்று போதகரும் இறையியலாளருமான ஜான் பைபர் எழுதி இருக்கிறார்.
எனவே உங்கள் உண்மையான சுயத்தை எங்கே கண்டுபிடிப்பீர்கள்?
பணத்திலா? பின்பற்றுபவர்களிலா? சாதனையிலா? தோற்றத்திலா? அரசியலிலா?
அதிகாரத்திலா? அந்தஸ்திலா? பாலியலிலா?
இல்லை, இயேசுவில் மட்டுமே.
இரண்டு கொரிந்தியர் 5:17 சொல்கிறது, "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!"
இது அற்புதமான செய்தி! நீங்கள் யார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதை இது சொல்கிறது. உங்களை உருவாக்கி மீட்டுக்கொண்ட தேவனே உங்கள் அடையாளத்தின் ஆதாரம். "இயேசுவால் நீங்கள் புதிய சிருஷ்ட்டியாக இருக்கிறீர்கள், மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் பெற முயற்சிப்பதில் இருந்து விடுவிக்கப்பட்டீர்கள், உங்கள் கடந்த காலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிப்பதில் இருந்து விடுதலையானீர்கள்"என்று அவர் சொல்கிறார்.
இயேசுவின் தேவகிருபையால், நீங்கள் முன்பு எப்படி இருந்தீர்கள், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், அல்லது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.
மாறாக, நீங்க தேவனுடைய அன்பான பிள்ளை.
உண்மையிலேயே அற்புதமான பகுதி வருகிறது.
தேவன் உங்களைப் படைத்ததால், நீங்கள் அவரோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவர் உங்களை யாராகப் படைத்தார் என்பதன் இறுதிப் பதிப்பாக அவ்வளவுக்கு மாறிவிடுவீர்கள். ஒரு விதத்தில், தேவன் உங்கள் உண்மையான சுயத்தை உங்களுக்கு மீட்டுத் தருகிறவராய் இருக்கிறார், அதையே நாம் அனைவரும் நமக்காகக் கண்டறிய முயற்சிப்பதில் அதிக நேரத்தையும் பெலத்தையும் செலவிடுகிறோம்.
இதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள முடிகிறதா?
மற்றவர்கள் உங்களை இழிவுபடுத்தும்போது, உங்களை கேள்விக்குள்ளாக்கும்போது, அல்லது உலகின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான உந்துதலை உணரும்போது, பிடித்துக் கொள்ள வேண்டிய சத்தியம் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் உறுதியாக நின்று, "நான் யார் என்று எனக்குத் தெரியும் என்று சொல்லவேண்டும். அது கேள்விக்குரியது அல்ல. நான் தேவனுடைய பிள்ளை, மன்னிப்பு பெற்றவன், விடுவிக்கப்பட்டவன், இயேசுவால் புதிதாக்கப்பட்டவன்.
இன்றே முயற்சி செய்து பாருங்கள்; வேலையில், சமூகத்தில், நண்பர்களுடன், உங்கள் உள்ளத்தில். இயேசுவின் மூலம் தேவன் உங்களை யார் என்று சொல்கிறார் என்பதை உறுதிப்படுத்துங்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள். நம்புங்கள். அதிலே வாழுங்கள். தேவன் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
ஆசீர்வாதங்கள்,
- நிக் ஹால்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![கிருபையின் கீதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F45636%2F1280x720.jpg&w=3840&q=75)
இந்த கிருபையின் பக்தி கீதத்தின் மூலம் கடவுள் உங்கள் மீதான அன்பின் ஆழத்தைக் கண்டறியவும். சுவிசேஷகர் நிக் ஹால், உங்கள் மீது பாடப்பட்ட கடவுளின் கிருபையின் கீதத்தில் சேர உங்களை அழைக்கும் சக்திவாய்ந்த 5 நாள் பக்தி மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக PULSE Outreachக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://anthemofgrace.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)