கிருபையின் கீதம்மாதிரி

கிருபையின் கீதம்

5 ல் 2 நாள்

இயேசுவைப் பின்பற்றுவதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அதில் எனக்கு மிகவும் பிடிக்காத விஷயம்.

தெளிவுபடுத்துகிறேன்.…

அவரது குடும்பத்தில் சேர தேவஅழைப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.நான் எதற்கும் தகுதியற்றவன். என் வாழ்க்கையில் நான் செய்த பாவங்களுக்கு நியாயத்தீர்ப்பு மட்டுமே தகுதியானது, அதை சரிசெய்ய என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னால் வாழமுடியாதது போல் தோன்றியது....பாவங்களை மூடப்படுவதின் கட்டணம் மிக அதிகம்... பிறகு தேவன் என் வழியை சரிசெய்ய விலைக்கிறையம் செலுத்தினார்.

அது தான் கிருபை.

இருந்தாலும், இங்கே விஷயம் என்னென்னா: வாழ்க்கையில் உங்களை கஷ்டப்படுத்துகிறவர்கள் உட்பட ஒவ்வொருவரும் தேவகிருபைக்கு பாத்திரமானவர்கள்.

நம் வாழ்வில் நம்மை வீழ்த்தும், அல்லது தவறான திசையில் கொண்டு போகும், பொதுவா நம்மை சோரம்போக்குகிற நபர்கள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் இருப்பார்கள். ஒருவேளை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர் தெரிந்தவராக இருக்கலாம். ஒருவேளை ஆன்லைன் தொடர்பில் இருக்கிறவராக இருக்கலாம்.

இன்றைய உலகில், பல நேரங்களில், நம்மை மிகவும் தொந்தரவு செய்கிறவர்கள் நாம் சந்தித்திராதவர்கள்; பொது நபர், அரசியல் கட்சி, டிக்டோக்கில் செல்வாக்கு உடையவர்களே.

யாராக இருந்தாலும், பொதுவான விஷயம் என்னென்னா, யாராவது நம்மை புண்படுத்தினால், அவர்கள் "அவர்களாக" ஆகிவிடுவார்கள் என்பதே நிலை.

அப்படியே, நீங்க அவர்களோடு நியாயப்படுத்த முடியாது. அவர்களிடம் பேச முடியாது. அவர்களை மதிக்க முடியாது. அவர்களை நேசிக்க முடியாது.

ஒருபோதும் நமக்குப் பொருந்தாத தரநிலைகளின் அடிப்படையில் நம்மை நாமே மதிப்பீடு செய்ய முடியாத அளவுகோல்களால் மதிப்பிடுகிறோம், - பெரும்பாலும் தனிநபர்களின் முழுக் கூட்டம் - கண்டனம் செய்து முத்திரை குத்தும் விசித்திரமான திறனை உடைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள். உங்களுக்கும் இருப்பார்கள்என்று சவால் விடுகிறேன்.

அப்படிச் செய்யாத தேவனுக்கு ஸ்தோத்திரம்!

ஏனென்றால், கிருபை என்பது நம் அனைவருக்கும் தேவையான ஒன்று என்பதால். அதைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்த அற்புதமான கிருபையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தேவன் உங்களையும் என்னையும் அழைக்கிறார்.

கொலோசெயர் 3:13 சொல்கிறது,

“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

நான் தேவனுடைய அன்புக்கு தகுதியானவன் அல்ல. அவர் என்னை மன்னிக்க அவசியமில்லை. அவருடனான ஐக்கியத்தையோ அல்லது பரலோகத்தின் நித்திய வாழ்வுக்கான வாக்குத்தத்ததையோ அவர் எனக்குக் கடன்பட்டிருக்கவில்லை. அதெல்லாம் அவருடைய கிருபை. அப்படியானால், தேவனிடமிருந்து இத்தகைய அற்புதமான கிருபையைப் பெற்ற நாம் அதை மற்றவர்களுக்கு எப்படி கொடுக்காமல் இருப்பது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?

கிருபை என்பது ஒருவர் சொல்வதையோ அல்லது செய்வதையோ எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. கிருபை என்பது உலகில் பாவத்தை வெறுப்பதை குறிக்காது. கிருபை என்பது நீதியை நிலைநிறுத்துவதற்கு நீங்க ஆயத்தமாக இல்லை என்று அர்த்தமுமில்ல.

கிருபை என்பது ஒருவரைப் பொறுப்பாக்காமல் இருப்பது அல்லது அவர்கள் உங்களை காயப்படுத்தும்போது அல்லது தவறாக நடந்துகொண்டால் மட்டுமே அவர்களை நேசிக்க மறுக்க செய்வது. அது ஏன்?

ஏன்னா தேவன் உங்களையும் அவர்களையும் அப்படித்தான் நேசிக்கிறார்.

வாழ்த்துக்கள்,

- நிக் ஹால்

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

கிருபையின் கீதம்

இந்த கிருபையின் பக்தி கீதத்தின் மூலம் கடவுள் உங்கள் மீதான அன்பின் ஆழத்தைக் கண்டறியவும். சுவிசேஷகர் நிக் ஹால், உங்கள் மீது பாடப்பட்ட கடவுளின் கிருபையின் கீதத்தில் சேர உங்களை அழைக்கும் சக்திவாய்ந்த 5 நாள் பக்தி மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக PULSE Outreachக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://anthemofgrace.com/